Page Loader
FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள்
விற்பனையில் புதிய சாதனை படைத்த கார் நிறுவனங்கள்

FY23இல் 3.6 கோடி கார்கள் விற்பனை - சாதனை படைக்கும் நிறுவனங்கள்

எழுதியவர் Siranjeevi
Apr 04, 2023
12:26 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வாகன சந்தையில் கார்களின் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. FY 23 இல், சந்தையில் 3.6 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன் கொரோனா தொற்றுக்கு முன் 3.2 மில்லியன் கார்கள் விற்பனை செய்யப்பட்டதே சிறந்த சாதனையாக இருந்தது. FADA வெளியிட்ட தரவின் படி ஆண்டுக்கு 22 சதவீதம் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சியாகும் என கூறியுள்ளனர். கொரோனா தொற்றின் போது பல கார்களின் விற்பனையானது நிறுத்தி வைக்கப்பட்டது. 2020 ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டில் தள்ளி வைக்கப்பட்டன. அதன்பின் பல மாடல்கள் வெளிவந்தன.

கார் நிறுவனங்கள்

FY23 இல் புதிய மைல்கல்லை எட்டிய கார்கள் - எஸ்யுவி கார்கள் மதிப்பு உயர்வு

அடுத்து, FY23 இல் பயணிகள் வாகன (PV) பிரிவில் மிகப்பெரிய பங்களிப்பை ஸ்போர்ட் யூட்டிலிட்டி வாகனங்கள் SUVs செய்துள்ளன. SUV கார்கள் மட்டும் 1,673,488 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி 43.02% பங்கைக் கொண்டுள்ளது. கொரோனா தொற்றுக்குப் பின் பல இந்திய கார்கள் மீது ஆர்வம் அதிகரித்தது. இதனால் லாக்டவுன் சேமிப்புக்கு பின் கார்கள் விற்பனை வளர்ச்சியடைந்தது. FY'23 தொற்று இல்லாத முதல் முழு ஆண்டாகவே மாறியுள்ளது என FADA குறிப்பிட்டுள்ளது. இனி வரும் பண்டிகை நாட்களிலும் புது மாடல்கள் களமிறக்கப்பட்டு விற்பனை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.