
இன்னோவா கிரிஸ்டாவின் டாப்-எண்டு மாடல்களின் விலையை அறிவித்தது டொயோட்டா!
செய்தி முன்னோட்டம்
2023 இன்னோவா கிரிஸ்டா கார் மாடலை கடந்த மார்ச் மாதம் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் மீண்டும் மறுஅறிமுகம் செய்தது டொயோட்டா.
ஹைகிராஸ் மாடலுக்கான செமிகண்டக்டர் தட்டுப்பாடு, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு என சில காரணங்களை முன் வைத்து கிரிஸ்டா மாடலின் தயாரிப்பை இன்னும் நிறுத்தாமல் இருக்கிறது டொயோட்டா.
கடந்த மார்ச் மாதம் மறுஅறிமுகம் செய்த போது டாப்-எண்டு வேரியன்ட்களின் விலையை மட்டும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. தற்போது டாப்-எண்டு வேரியன்ட்களின் விலையை அறிவித்திருக்கிறது டொயோட்டா.
5 ஸ்பீடு கியர்பாக்ஸூடன் இணைந்த, 150hp பவர் மற்றும் 343Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 2.4 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனை மட்டுமே இந்த கிரிஸ்டாவில் வழங்குகிறது டொயோட்டா.
இந்தியாவில் ஹைகிராஸுடன் சேர்த்து இந்த இன்னோவா கிரிஸ்டாவையும் விற்பனை செய்யவிருக்கிறது டொயோட்டா.
டொயோட்டா
விலை விபரம்:
G, GX, VX மற்றும் ZX ஆகிய நான்கு வேரியன்ட்களாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது இன்னோவா கிரிஸ்டா.
G 7-சீட்டர் - ரூ.19.13 லட்சம்
G 8-சீட்டர் - ரூ.19.18 லட்சம்
GX 7-சீட்டர் - ரூ.19.99 லட்சம்
GX 8-சீட்டர் - ரூ.19.99 லட்சம்
GX FLT 7-சீட்டர் - ரூ.19.99 லட்சம்
GX FLT 8-சீட்டர் - ரூ.19.99 லட்சம்
VX 7-சீட்டர் - ரூ.23.79 லட்சம்
VX 8- சீட்டர் - ரூ.23.84 லட்சம்
VX FLT 7-சீட்டர் - ரூ.23.79 லட்சம்
VX FLT 8-சீட்டர் - ரூ.23.84 லட்சம்
ZX 7-சீட்டர் - ரூ.25.43 லட்சம்