2023ஆம் ஆண்டின் டாப் 5 சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை 2023இல் இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் கருத்தில் கொண்டு அரசு எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பலரும் எலக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகரிப்பதைக் கண்டு, ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மற்றும் ஏதர் எனர்ஜி போன்ற பல வாகன உற்பத்தியாளர்களும், ரிவர் மொபிலிட்டி மற்றும் சிம்பிள் எனர்ஜி போன்ற புதிய நிறுவனங்களும் 2023இல் புதிய வாகனங்களை சலுகைகளோடு அறிமுகப்படுத்தினர். இந்நிலையில், 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இதில் பார்க்கலாம்.
ஓலா எஸ்1 எக்ஸ்: ஆரம்ப விலை ரூ.90,000
ஓலா எஸ்1 எக்ஸ் பிரிவில் இரண்டு மாடல்களைக் கொண்டுள்ளது மற்றும் டூயல்-டோன் டிசைன், ட்யூபுலர் கிராப் ரெயிலுடன் கூடிய ஒற்றை இருக்கை வசதியைக் கொண்டுள்ளது. ஸ்மைலி வடிவ இரட்டை-பாட் எல்இடி ஹெட்லைட் யூனிட் மற்றும் ஸ்டீல் வீல்கள் ஆகியவற்றையும் இவை கொண்டுள்ளன. இரண்டு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் பாதுகாப்பிற்காக இரட்டை பின்புற ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. 2 கிலோவாட் மற்றும் 3 கிலோவாட் பேட்டரி பேக் விருப்பத் தேர்வுடன் 91கிமீ/151கிமீ வரம்புடன் இவை சந்தையில் கிடைக்கின்றன.
சிம்பிள் டாட் ஒன் : விலை ரூ.99,000
சிம்பிள் டாட் ஒன் மிகச்சிறந்த கோண வடிவமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் ஏப்ரனில் பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லேம்ப், அகலமான ஹேண்டில்பார், பிளாட் ஃபுட்போர்டு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாகனத்தை ஓட்டுபவரின் பாதுகாப்பிற்காக, இது டிஸ்க் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் பின்புற மோனோ-ஷாக் யூனிட் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. இதில் 3.7 கிலோவாட் பேட்டரி பேக் பொருத்தப்பட்டுள்ள நிலையில், ஒருமுறை சார்ஜ் செய்தால் 151 கிமீ வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஏதர் 450எஸ் : விலை ரூ.1.18 லட்சம்
எல்இடி ஹெட்லைட் யூனிட், ஃப்ளஷ் பொருத்தப்பட்ட சைட் ஸ்டாண்ட், டிசைனர் மிரர்கள், 12 இன்ச் வீல்கள், நேர்த்தியான எல்இடி டெயில்லேம்ப் மற்றும் 7.0 இன்ச் தொடுதிரையுடன் கூடிய கூர்மையான தோற்றமுடைய ஏப்ரானை 450எஸ் கொண்டுள்ளது. மேலும், இதில் டிஸ்க் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் வாகனத்தை ஓட்டுபவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சரிசெய்யக்கூடிய மோனோ-ஷாக் யூனிட் ஆகியவை உள்ளன. ஸ்போர்ட்ஸ் மாடல் போல் தோற்றமளிக்கும் இந்த எலக்ட்ரிக் வாகனம் நிலையான 2.9கிலோவாட் பேட்டரி பேக்கைக் கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 115 கிமீ வரை செல்லும்.
ரிவர் இண்டி: விலை ரூ.1.25 லட்சம்
ரிவர் இண்டி முன் ஏப்ரனில் டூயல்-பாட் ஹெட்லைட் அமைப்பு, அகலமான ஹேண்டில்பார், 42-லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ் கொண்ட ஒற்றை இருக்கையைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் 12-லிட்டர் பூட்டக்கூடிய கையுறை பெட்டி மற்றும் கரடுமுரடான 14-இன்ச் அலாய் வீல்கள் ஆகியவற்றைப் பெற்றுள்ளது. வாகன ஓட்டுனரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, இதில் டிஸ்க் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் டூயல் ரியர் ஷாக் அப்சார்பர்கள் உள்ளன. ஜீரோ-எமிஷன் ஸ்கூட்டரான இது நிலையான 4கிலோவாட் பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 120கிமீ வரை செல்ல முடியும்.
டிவிஎஸ் எக்ஸ் : விலை ரூ.2.5 லட்சம்
டிவிஎஸ் எக்ஸ் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும் எல்இடி ஹெட்லேம்ப் க்ளஸ்டர், கார்னர்லிங் விளக்குகள், அகலமான ஹேண்டில்பார், கூர்மையான தோற்றமுடைய பக்கவாட்டு பேனல்கள், மெலிதான எல்இடி டெயில்லேம்ப் மற்றும் மிகப்பெரிய 10.2-இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வாகன ஓட்டுனரின் பாதுகாப்புக்காக டிஸ்க் பிரேக்குகள், ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், டெலஸ்கோபிக் ஃப்ரண்ட் ஃபோர்க்குகள் மற்றும் ப்ரீலோட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பின்புற மோனோ-ஷாக் யூனிட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பிரீமியம் மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான இது 3.8கிலோவாட் நிலையான பேட்டரி பேக்குடன் வருகின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 140கிமீ வரை செல்ல முடியும்.