
வர்த்தக முத்திரை மீறல் தொடர்பாக இந்திய பேட்டரி உற்பத்தியாளர் மீது வழக்கு தொடர்ந்தது டெஸ்லா
செய்தி முன்னோட்டம்
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, இந்திய பேட்டரி தயாரிப்பாளரான டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.
குருகிராம் சார்ந்த நிறுவனத்திற்கு எதிராக, வர்த்தக முத்திரை மீறல் மற்றும் நியாயமற்ற வணிக நடைமுறைகளை மேற்கொண்டதாக டெஸ்லா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
அந்த பாட்டரி நிறுவனத்தின் விளம்பரத்தில் நன்கு அறியப்பட்ட பிராண்ட்(டெஸ்லா) பெயரைப் பயன்படுத்தியதாகக் கூறி, அதற்கு எதிராகத் தடை உத்தரவு மற்றும் நஷ்டஈடு கோரி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டது.
டெலாவேர் சட்டங்களின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட டெஸ்லா, பல உலகளாவிய அதிகார வரம்புகளில் வர்த்தக முத்திரை பதிவுகளை தன்னிடம் கொண்டுள்ளது. டெஸ்லா, 2022-ல் பிரதிவாதிகளுக்கு நிறுத்தம் மற்றும் விலகல் அறிவிப்பை அனுப்பியது.
நீதிமன்ற அறிவிப்பு
டெஸ்லா பவர்ஸ் இந்தியா நிறுவனத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
ஆகஸ்ட் 2022 மற்றும் மார்ச் 2023 க்கு இடையில் பல கடிதப் பரிமாற்றங்கள் இருந்தபோதிலும், இந்திய நிறுவனம் 'டெஸ்லா' பெயரில் தங்கள் தயாரிப்புகளை தொடர்ந்து சந்தைப்படுத்தியது.
இது வழக்கைத் தாக்கல் செய்ய டெஸ்லா இன்க் நிறுவனத்தைத் தூண்டியது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அனிஷ் தயாள், டெஸ்லா பவர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு மே 2 அன்று நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் விசாரணைகளை மே 22, 2024 அன்று நடத்த நீதிமன்றம் திட்டமிட்டுள்ளது.
ஆட்டோமொபைல்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் யுபிஎஸ் அமைப்புகளுக்கான லீட்-அமில பேட்டரிகளை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற இந்திய நிறுவனம், மின்சார வாகனங்கள் எதையும் தயாரிப்பதில்லை என்று அதன் சட்டப் பிரதிநிதி மூலம் பதிலளித்தது.