Page Loader
சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா 

சீனாவில் ரோபோடாக்சியை அறிமுகப்படுத்த முன்மொழிந்தது டெஸ்லா 

எழுதியவர் Sindhuja SM
May 08, 2024
11:05 am

செய்தி முன்னோட்டம்

டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது சமீபத்திய சீன பயணத்தின் போது சீனாவில் செல்ஃப் -டிரைவிங் (FSD) வாகனங்களின் திறன்களை ரோபோடாக்சிகளாக அறிமுகப்படுத்த முன்மொழிந்தார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. சீன அரசாங்கமும் மஸ்கின் திட்டத்திற்கு சில ஆதரவை வழங்கி உள்ளது. எலான் மஸ்க் சீனாவிற்கு அண்மையில் சென்றிருந்தபோது டெஸ்லாவின் அதிநவீன FSD மென்பொருளை வெளியிடுவதற்கான ஒழுங்குமுறை அனுமதியை அவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. சீனாவின் டாக்ஸி சேவைகளில் FSD செயல்பாடுகளை செயல்படுத்தவும் மஸ்க் முன்மொழிந்ததாக சைனா டெய்லி செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

சீனா 

பைடு இன்க் நிறுவனத்துடன் இணைந்தது டெஸ்லா 

சீனாவில் டெஸ்லா தனது FSD ரோல் அவுட்டை இணைய நிறுவனமான பைடு இன்க்(NASDAQ:BIDU) உடன் இணைந்து செய்லபடுத்தும். டெஸ்லாவின் சீன மாடல்கள் ஏற்கனவே பைடுவின் மேம்பட்ட வழிசெலுத்தல் அமைப்புகளை இணைத்துள்ளன. சீனா டெஸ்லாவின் இரண்டாவது பெரிய சந்தையாகும். டெஸ்லா தனது சீன வாகனங்களின் தரவுகளை 2021 ஆம் ஆண்டு முதல் ஷாங்காயில் சேமித்து வருகிறது. ஆனால், சீன விதிமுறைகளுக்கு இணங்க, இந்தத் தரவு இன்னும் அமெரிக்காவிற்கு அனுப்பப்படவில்லை. மஸ்க் தனது சீன பயணத்தின் போது, உள்நாட்டில் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவை ஏற்றுமதி செய்ய தேவையான அனுமதிகளை பெற உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அனுமதி பெற்றார்.