NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'
    இரண்டு ஆண்டு காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'

    இரண்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின்பு அறிமுகமான 'டெஸ்லா சைபர்டிரக்'

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 01, 2023
    04:12 pm

    செய்தி முன்னோட்டம்

    2019ம் ஆண்டு கான்செப்ட் மாடலாக அறிமுகமான டெஸ்லா சைபர்டிரக்கானது (Cybertruck) இரண்டு ஆண்டு கால காத்திருப்புக்குப் பின்பு இறுதியாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த டெஸ்லா சைபர்டிரக் பிக்-அப்பின் தயாரிப்பு வடிவத்தை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள கிகா ஆஸ்டின் தொழிற்சாலையில் காட்சிப்படுத்தியிருந்தது அந்நிறுவனம். தங்களுடைய புதிய சைபர்டிரக்கின் முதல் 10 யூனிட்டுகளை தங்களுடைய ஊழியர்களுக்கு டெலிவரி செய்திருக்கிறது அந்நிறுவனம்.

    சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார், இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் என மூன்று விதமான பவர்ட்ரெயின் தேர்வுகளில் அறிமுகமாகியிருக்கிறது டெஸ்லாவின் புதிய சைபர்டிரக்.

    இவற்றில் இரண்டு மோட்டார்கள் கொண்ட வேரியன்டானது ஆல் வீல் டிரைவாக இருக்கும் நிலையில், மூன்று மோட்டார்கள் கொண்ட வேரியன்டை சைபர்பீஸ்ட் என அழைக்கின்றனர்.

    டெஸ்லா

    டெஸ்லா சைபர்டிரக்: பவர் மற்றும் ரேஞ்சு 

    மேற்கூறிய மூன்று வேரியன்ட்களில், மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட வேரியன்டானது 845hp பவரை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டிருக்கிறது. மேலும், இந்த வேரியன்டானது 515 கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கிறது.

    இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைபர்டிரக் வேரியன்டானது 600hp பவரையும், 547 கிமீ ரேஞ்சையும் கொண்டிருக்கிறது. இந்த மூன்று வேரியன்டிகளில் அதிக ரேஞ்சைக் கொண்டிருக்கும் வேரியன்ட் இது தான்.

    ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட அடிப்படை சைபர்டிரக் வேரியன்டின் பவர் மற்றும் ரேஞ்சு குறித்த தகவல்களை, டெஸ்லாவோ, எலான் மஸ்க்கோ பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும், அந்த அடிப்படை வேரியன்டானது 402 கிமீ ரேஞ்சைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆட்டோமொபைல்

    டெஸ்லா சைபர்டிரக்: விலை 

    அதிக செயல்திறன் கொண்ட அடிப்படை எலெக்ட்ரிக் பிக்-அப்பான, ஒரெயொரு எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட சைபர்டிரக்கானது 60,990 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.50.8 லட்சம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    தற்போதே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது தான் என்றாலும், இந்த அடிப்படைய வேரியன்டை 2025ம் ஆண்டே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது டெஸ்லா.

    ஆல் வீல் டிரைவ் மற்றும் டூயல் எலெக்டரிக் மோட்டார்கள் கொண்ட மாடலை 79,990 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.66.63 லட்சம்) விலையிலும், டாப் எண்டான மூன்று எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொண்ட சைபர்பீஸ்டை 99,990 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.83.29 லட்சம்) விலையிலும் அறிமுகப்படுத்தியிருக்கிறது டெஸ்லா.

    அடிப்படை வேரின்யடை தவிர்த்து மேற்கூறிய இரண்டு வேரியன்ட்களின் டெலிவரியையும் அடுத்த ஆண்டு தொடங்க திட்டமிட்டிருக்கிறது டெஸ்லா.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெஸ்லா
    எலக்ட்ரிக் கார்
    அமெரிக்கா
    ஆட்டோமொபைல்

    சமீபத்திய

    ராஜ் நிதிமோருவுடனான தனது உறவை சமந்தா உறுதி செய்தாரா? வைரலாகும் இன்ஸ்டா பதிவு சமந்தா ரூத் பிரபு
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பார்கவாஸ்த்ரா' வெற்றிகரமாக சோதனை: இந்தியாவின் பாதுகாப்பு அம்சத்தில் மற்றொரு மைல்கல் இந்தியா
    இந்தியவில் ஏன் திடீரென்று ஜாகுவார் லேண்ட் ரோவர் விற்பனை மந்தமாகியுள்ளது? ஜாகுவார் லேண்டு ரோவர்
    ஐபிஎல் 2025: இறுதி கட்ட போட்டிகளுக்கு தற்காலிக மாற்று வீரர்களுக்கு அனுமதி ஐபிஎல் 2025

    டெஸ்லா

    உலக பணக்காரர்கள் பட்டியல்.. மீண்டும் முதலிடத்தைப் பிடித்த எலான் மஸ்க்! எலான் மஸ்க்
    டெஸ்லா நிறுவனத்தின் மீது தொடர்ந்து குவியும் 'இனப் பாகுபாடு' குற்றச்சாட்டுக்கள்! அமெரிக்கா
    இந்தியாவில் டெஸ்லா தொழிற்சாலை: கார்களின் ஆரம்ப விலை ரூ.20 லட்சம் எலக்ட்ரிக் கார்
    இந்தியாவில் புதிய அலுவலகத்தை அமைக்கும் டெஸ்லா, இந்தியாவில் அதன் திட்டம் என்ன? ஆட்டோமொபைல்

    எலக்ட்ரிக் கார்

    சீனாவின் BYD ஆட்டோமொபைல் நிறுவனத்தின் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு சீனா
    2026க்குள் ஐந்து மின்சார எஸ்யூவி கார்களை அறிமுகப்படுத்த மஹிந்திரா திட்டம் மஹிந்திரா
    ஒரு லட்சம் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து சாதனை படைத்தது டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய கான்செப்ட் எலெக்ட்ரிக் தார் (தார்.e) மாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறது மஹிந்திரா மஹிந்திரா

    அமெரிக்கா

    இஸ்ரேல் தாக்குதலில் காசா மருத்துவமனையில் 12 பேர் கொல்லப்பட்டனர்- ஹமாஸ் சுகாதார அமைச்சகம் இஸ்ரேல்
    சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்ய மறுத்த அமெரிக்க நீதிமன்றம் சமூக வலைத்தளம்
    சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா வட கொரியா
    ஐந்து நாள் போர் நிறுத்தம், பணயக் கைதிகள் விடுதலை- இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஒப்பந்தம் இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்

    ஆட்டோமொபைல்

    நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலை இந்திய சாலைகளில் சோதனை செய்து வரும் மாருதி சுஸூகி மாருதி
    2024 ஜனவரிக்குள் இந்தியாவில் கால் பதிக்கும் எலான் மஸ்கின் 'டெஸ்லா'? டெஸ்லா
    புதிய எலக்ட்ரிக் டிரக்கை அறிமுகம் செய்தது ராம் நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்கள்
    புதிய 'எலெட்ரெ' மாடல் எலெக்ட்ரிக் காருடன் இந்தியாவில் எண்ட்ரி கொடுத்திருக்கும் லோட்டஸ் எலக்ட்ரிக் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025