2024 ஜூலையில் 8 சதவீதம் வளர்ச்சி கண்ட சுசுகி மோட்டார் சைக்கிள் இந்தியா நிறுவனம்
இந்தியாவில் உள்ள சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் (எஸ்எம்ஐபிஎல்) ஜூலை 2024இல் 1,16,714 இருசக்கர வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 1,07,836 இருசக்கர வாகனங்களை விற்றிருந்த நிலையில், தற்போது 8% வளர்ச்சி கண்டுள்ளது. 2024 ஜூலை விற்பனையில் உள்நாட்டு சந்தையில் மட்டும் 1,00,602 வாகனங்களை விற்றுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக இந்திய உள்நாட்டு சந்தையில் ஒரு லட்சம் மைல்ஸ்டோனை நிறுவனம் எட்டியது. முன்னதாக, எஸ்எம்ஐபிஎல் 2023 ஜூலையில் உள்நாட்டு சந்தையில் 80,309 வாகனங்களை வீற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஜூலை 2024 இல் 16,112 யூனிட்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 27,527 யூனிட்களை ஏற்றுமதி செய்தது குறிப்பிடத்தக்கது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு வண்ணங்களில் வாகனங்கள் அறிமுகம்
ஜூலை 2024 இல், எஸ்எம்ஐபிஎல் பண்டிகை காலத்தை முன்னிட்டு தனது ஸ்கூட்டர் மாடல்களை புதுப்பித்தது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக, நிறுவனம் சுசுகி எஸெஸ் 125 மற்றும் சுசுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ஆகியவற்றை சிறப்பு பண்டிகை வண்ணங்களில் அறிமுகப்படுத்தியது. கூடுதலாக, 2024 Suzuki அவெனிஸை நான்கு புதிய வண்ணக் கலவைகள் மற்றும் கிராபிக்ஸுடன் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், ஜூலை 2024 விற்பனை குறித்து பேசிய நிறுவனத்தின் நிர்வாகங் இயக்குனர் கெனிச்சி உமேடா, உள்நாட்டு சந்தையில் ஒரு லட்சம் மைல்கல்லை எட்ட உதவிய வாடிக்கையாளர்கள் மற்றும் டீலர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.