இ20 பெட்ரோலில் ஓடக்கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்!
இருசக்கர வாகன தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுஸுகி நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. நாட்டில் விரைவில் புதிய ஓபிடி 2 என்கிற புதிய மாசு உமிழ்வு விதி அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த விதிக்கு உட்பட்டு, இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டர் 20 சதவீதம் எத்தனால் 80 சதவீதம் பெட்ரோல் எனும் கலவையைக் கொண்ட எரிபொருளிலேயே இவை இயங்குகிறது.
இ20 ரக எரிபொருளிலும் இயங்கும் சுஸுகி ஸ்கூட்டர்கள் இந்தியாவில் அறிமுகம்
இதில் காற்று மாசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இ20 ரக எரிபொருள் நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், சுஸுகி அக்செஸ் 125 ரூ. 79,400 என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 89,500 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். மேலும், ரைடு கன்னெக்ட் எடிசன் கொண்ட சுஸுகி அக்செஸ்ஸே அதிக விலையைக் கொண்டதாக உள்ளது. அதேப்போல் சுஸுகி அவெனிஸ் மாடலின் விலை சற்று உயர்ந்திருக்கின்றது. அதில், ரூ. 92 ஆயிரம் தொடங்கி ரூ. 92,300 வரையிலான விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ரூ. 93 ஆயிரம் தொடங்கி ரூ. 97 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.