LOADING...
மின்சார வாகனங்கள் இனி வேண்டாம்! ரூ.2 லட்சம் கோடி நஷ்டத்தால் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் அதிரடி முடிவு
ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்திற்கு ரூ.2 லட்சம் கோடி நஷ்டத்தால் எலக்ட்ரிக் வாகனத் தயாரிப்பில் இருந்து பின்வாங்குகிறது.

மின்சார வாகனங்கள் இனி வேண்டாம்! ரூ.2 லட்சம் கோடி நஷ்டத்தால் ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் அதிரடி முடிவு

எழுதியவர் Sekar Chinnappan
Feb 27, 2026
03:22 pm

செய்தி முன்னோட்டம்

ஜீப் மற்றும் ஃபியட் போன்ற புகழ்பெற்ற பிராண்டுகளை உள்ளடக்கிய ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம், கடந்த ஆண்டில் இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சம் கோடி நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மந்தமான தேவையே இந்த இமாலய நஷ்டத்திற்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, தனது எதிர்காலத் திட்டங்களை முழுமையாக மாற்றியமைக்கப்போவதாக வியாழக்கிழமை (பிப்ரவரி 26, 2026) அன்று ஸ்டெல்லாண்டிஸ் அறிவித்தது.

பெட்ரோல் டீசல்

மீண்டும் பெட்ரோல், டீசல் இன்ஜினுக்குத் திரும்புதல்

எலக்ட்ரிக் வாகன விற்பனை எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக இருந்ததால், நிறுவனம் மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் கார்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே தொடங்கப்பட்ட பல எலக்ட்ரிக் வாகனத் திட்டங்களை நிறுவனம் கைவிட்டுள்ளது. குறிப்பாக, கனடாவில் பேட்டரி தொழிற்சாலையை உருவாக்கும் திட்டத்திலிருந்து விலகியதுடன், அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து பேட்டரி தொழிற்சாலைகளை உருவாக்கும் கூட்டு முயற்சியிலிருந்தும் வெளியேறத் திட்டமிட்டுள்ளது.

சர்வதேச சூழல்

சர்வதேச சூழலும் அமெரிக்கத் தாக்கமும்

ஸ்டெல்லாண்டிஸ் மட்டுமல்லாமல், ஃபோர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற அமெரிக்க ஆட்டோமொபைல் ஜாம்பவான்களும் எலக்ட்ரிக் வாகனத் திட்டங்களில் இருந்து பின்வாங்கி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான மானியங்களை ரத்து செய்ததும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் வாகனப் புகை உமிழ்வு இலக்குகளை தளர்த்தியுள்ளன. இது நிறுவனங்கள் மீண்டும் பழைய தொழில்நுட்பங்களுக்குத் திரும்ப வழிவகுத்துள்ளது.

Advertisement

எதிர்கால வியூகம்

புதிய தலைமை மற்றும் எதிர்கால வியூகம்

நிறுவனத்தின் லாபகரமான விலைக் கொள்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முன்னாள் சிஇஓ கார்லோஸ் தவரெஸ் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக அன்டோனியோ ஃபிலோசா கடந்த ஜூலை மாதம் பொறுப்பேற்றார். "ஆற்றல் மாற்றத்தின் வேகத்தை நாங்கள் தவறாகக் கணித்துவிட்டோம்" என்று ஒப்புக்கொண்ட ஃபிலோசா, இனி வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான பெட்ரோல், டீசல், ஹைப்ரிட் அல்லது எலக்ட்ரிக் என எதைத் வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை வழங்கப்போவதாகத் தெரிவித்தார். இந்த ஆண்டு அமெரிக்காவில் புதிய பெட்ரோல் என்ஜின் பிக்கப் வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் மீண்டும் லாபப் பாதைக்குத் திரும்ப முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement