Loading...
ஸ்கோடா ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் விவரம்
ஸ்கோடா ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்

ஸ்கோடா ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்: விலை மற்றும் புதிய அம்சங்கள் விவரம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 06, 2026
01:53 pm

செய்தி முன்னோட்டம்

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா, இந்திய சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தனது 'ஸ்லேவியா ஃபேஸ்லிஃப்ட்' காரை ரூ.9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஸ்கோடா ஸ்லேவியா மாடலானது கிளாசிக், கிளாசிக்+, சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், ப்ரெஸ்டீஜ் மற்றும் மான்டே கர்லோ ஆகிய 6 முக்கிய வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதன் ஆரம்ப கிளாசிக் 1.0 TSI MT வேரியண்ட் ரூ.9.99 லட்சத்திலும், கிளாசிக்+ மாடல் ரூ.10.99 லட்சத்திலும் கிடைக்கின்றன. மேலும் சிக்னேச்சர் வேரியண்ட் ரூ.13.94 லட்சத்திற்கும், ஸ்போர்ட்லைன் மற்றும் ப்ரெஸ்டீஜ் முறையே ரூ.14.34 லட்சம் மற்றும் ரூ.15.89 லட்சத்திற்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டாப்-எண்ட் மாடலான மான்டே கர்லோ 1.5 TSI DSG பதிப்பின் விலை ரூ.18.84 லட்சம்(எக்ஸ்-ஷோரூம்) ஆகும்.

வடிவமைப்பு

வடிவமைப்பு, எஞ்சின் மற்றும் புதிய கியர்பாக்ஸ் மாற்றம்

இந்த கார் ஏற்கனவே உள்ள 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ-பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளை தொடர்கிறது.

இருப்பினும், 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சினில் புதிய 8-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் டிஎஸ்ஐ எஞ்சின் வழக்கமான 7-ஸ்பீட் டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது.

காரின் உட்புறத்தில் 10.25-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1-இன்ச் டச்ஸ்கிரீன், பின்புற இருக்கைகளுக்கான மசாஜ் வசதி, 360-டிகிரி கேமரா மற்றும் கூகுள் கிளவுட் தொழில்நுட்பத்துடன் கூடிய AIகுரல் உதவி மையம் ஆகிய நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

6 ஏர்பேக்குகள் உட்பட 25-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் இதில் தரநிலையாக வழங்கப்படுகின்றன.

ADVERTISEMENT