
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மோட்டார் சைக்கிளில் பிரச்சினை - 5000 யூனிட்களைத் திரும்பப்பெறுகிறது
செய்தி முன்னோட்டம்
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 2017 முதல் 2021 வரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஹிமாலயன் மோட்டார் பைக்கின் யூனிட்களை திரும்பப் பெற்றுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகத்துடன் (NHTSA) அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு ஒன்றில், ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 4,891 யூனிட்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்பிரச்சினைக்கு காரணம், "காலிபர் அரிப்பிலிருந்து பிரேக் செயல்பாடு இழப்பு" காரணம் எனக்கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாடல்கள் மார்ச் 1, 2017 முதல் பிப்ரவரி 28, 2021 வரை தயாரிக்கப்பட்டன.
மேலும், இவை, நாட்டில் குளிர்காலத்தில் சாலைகளைச் சுத்தப்படுத்தப் பயன்படுத்தப்படும் உப்பு, பிரேக் காலிப்பர்களை சிதைத்து, "பிரேக் செயல்பாடு குறைவதற்கு அல்லது மொத்த இழப்பை ஏற்படுத்தும்" என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் பைக் பிரச்சினை - என்ன காரணம்?
எனவே, பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் முன் மற்றும் பின்புற பிரேக் காலிப்பர்களை மாற்றுவதற்கு நிறுவனம் தானாக முன்வந்து திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது பைக்குகளை திரும்பப் பெறுவது இது முதல் முறை அல்ல.
கடந்த 2020 ஆம் ஆண்டில், நிறுவனம் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின்ஸ் மற்றும் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆகியவற்றின் 15,000 க்கும் மேற்பட்ட யூனிட்களை திரும்பப் பெற்றது.
அப்போதும் இதே போன்ற ஒரு பிரச்சினை கூறப்பட்டது. 2020 ரீகால் இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் தென் கொரியாவில் மேற்கொள்ளப்பட்டது.
இந்தியாவில் உள்ள ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் மாடல்கள் சமீபத்திய ரீகால்களால் பாதிக்கப்படவில்லை என்பதை வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.