LOADING...
ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 பைக் 6 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது
ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350

ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 பைக் 6 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியது

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
04:24 pm

செய்தி முன்னோட்டம்

J சீரிஸ் பிளாட்ஃபார்மில் ராயல் என்ஃபீல்டு உருவாக்கிய முதல் பைக் மாடல் மீட்டியார் 350 தான். இந்த நிலையில், இந்த பைக் மாடல் தற்போது 6 லட்சம் யூனிட்டுகள் என்ற விற்பனையைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சற்று குறைவான விலையில் நல்ல பெர்ஃபாமன்ஸ் தரக்கூடிய, ப்ரீமியமான அனுபவம் கொண்ட ரெட்ரோ க்ரூஸர் பைக் வேண்டும் என்றால் ராயல் என்ஃபீல்டு மீட்டியார் 350 தான் சிறந்த சாய்ஸ். இந்தியாவில் இந்த பைக் ரூ.1.96 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பைக்

மீட்டியார் 350 சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. இந்த இன்ஜினானது 20.2 hp பவர் மற்றும் 27 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸைக் கொண்டிருக்கும் இந்த பைக்கில், ஸ்லிப்பர் கிளட்ச், டிஜி அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் பாடு, LED விளக்குகள், டைப்-C USB சார்ஜிங் போர்ட், அட்ஜஸ்டபிள் லீவர்கள் ஆகிய அம்சங்களையும் கொடுத்திருக்கிறது ராயல் என்ஃபீல்டு.

Advertisement