Loading...
EV ஸ்கூட்டர் வாங்குனா பணம் மிச்சமா? பெட்ரோல் பைக்கை விட பராமரிப்பு செலவு கம்மியா? மறைமுகமாக இருக்கும் ஷாக்கிங் கணக்கு
பெட்ரோல் பைக் vs EV ஸ்கூட்டர்

EV ஸ்கூட்டர் வாங்குனா பணம் மிச்சமா? பெட்ரோல் பைக்கை விட பராமரிப்பு செலவு கம்மியா? மறைமுகமாக இருக்கும் ஷாக்கிங் கணக்கு

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
07:58 pm

செய்தி முன்னோட்டம்

சாதாரண பெட்ரோல் பைக்கோடு ஒப்பிடும் போது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் என்ஜின், ஸ்பார்க் பிளக், கியர்பாக்ஸ் மற்றும் கிளட்ச் பிளேட் போன்ற நூற்றுக்கணக்கான இயங்கும் பாகங்கள் கிடையாது. இதனால் மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கிலோமீட்டருக்கு ஒருமுறை என்ஜின் ஆயில் மாற்றுவது, ஃபில்டர்களை சுத்தம் செய்வது போன்ற வழக்கமான சர்வீஸ் செலவுகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. தொடக்ககால பராமரிப்பு செலவைப் பொறுத்தவரை மின்சார வாகனங்கள் உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய பணசேமிப்பையே தருகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கூடுதல் செலவு

பிரேக் பேட் மற்றும் டயர் தேய்மானம் தரும் கூடுதல் செலவு

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தங்களது கனமான பேட்டரிகள் காரணமாக சாதாரண பெட்ரோல் பைக்குகளை விடக் கூடுதல் எடையைக் கொண்டிருக்கின்றன.

இந்த அதிகப்படியான எடையால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டயர்கள் மற்றும் பிரேக் பேடுகள் வழக்கத்தை விட வேகமாகத் தேய்மானமடைகின்றன.

எனவே பெட்ரோல் பைக்கை விட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பிரேக் பேட்களையும் டயர்களையும் அடிக்கடி மாற்ற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இது பலரும் கவனிக்கத் தவறுகின்ற ஒரு முக்கிய மறைமுகப் பராமரிப்பு செலவாகும்.

பேட்டரி செலவு

3 முதல் 5 ஆண்டுகளில் வரும் பேட்டரி மாற்றும் செலவு

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மெயின்டெனன்ஸ் கணக்கில் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருப்பது அதன் பேட்டரி மாற்றும் செலவுதான்.

பொதுவாக மின்சார வாகனங்களின் பேட்டரிகள் 3 முதல் 5 ஆண்டுகள் வரை மட்டுமே சிறப்பான செயல்திறனை வழங்கும்.

அதன்பின் பேட்டரியை மாற்ற நேரிட்டால், அது வாகனத்தின் மொத்த விலையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் வரை செலவை இழுத்துவிட்டுவிடும்.

வழக்கமான சர்வீஸ் செலவில் மிச்சமாகும் தொகை அனைத்தும் இந்த ஒரே பேட்டரி மாற்றும் செலவில் சரியாகிவிடும் நிலையும் உள்ளது.

ADVERTISEMENT

மென்பொருள் புதுப்பித்தல்

மென்பொருள் புதுப்பித்தல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கோளாறுகள்

நவீன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தும் சென்சார்கள் மற்றும் மென்பொருட்கள் மூலம் இயங்குவதால், சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டாலும் கூடப் பயனர்கள் உள்ளூர் மெக்கானிக்கிடம் செல்ல முடியாது.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டரை மட்டுமே சார வேண்டியுள்ளது.

உத்தரவாதக் காலம் முடிந்த பிறகு, இதுபோன்ற எலக்ட்ரானிக் பாகங்கள் மற்றும் கண்ட்ரோலர்களில் ஏற்படும் பழுதுகளை சரிசெய்வதற்குப் பெட்ரோல் பைக்கை விட இருமடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

ஒப்பீடு

யாருக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் லாபம்?

நீங்கள் தினமும் 40 முதல் 50 கிலோமீட்டருக்கு மேல் பயணிப்பவராக இருந்தால், பெட்ரோல் செலவில் மிச்சமாகும் பணத்தைக் கொண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மாற்றும் செலவை ஈடுகட்டிவிட முடியும்.

ஆனால் மிகக் குறைந்த தூரம் மட்டுமே பயணிப்பவர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விட பெட்ரோல் பைக்கே நீண்ட காலத்தில் சிக்கனமான தேர்வாக இருக்கும்.

எனவே வெறும் விளம்பரங்களைப் பார்த்து ஏமாறாமல், உங்களது தினசரி பயணத் தேவையை சரியாகக் கணக்கிட்ட பிறகே சரியான வாகனத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ADVERTISEMENT