NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / ஆட்டோ செய்தி / ஏலத்திற்கு வந்த மறைந்த நடிகர் 'பால் வால்க்கரி'ன் கார்.. எவ்வளவுக்கு ஏலம் போனது?
    ஏலத்திற்கு வந்த மறைந்த நடிகர் 'பால் வால்க்கரி'ன் கார்.. எவ்வளவுக்கு ஏலம் போனது?
    1/2
    ஆட்டோ 1 நிமிட வாசிப்பு

    ஏலத்திற்கு வந்த மறைந்த நடிகர் 'பால் வால்க்கரி'ன் கார்.. எவ்வளவுக்கு ஏலம் போனது?

    எழுதியவர் Prasanna Venkatesh
    May 10, 2023
    11:27 am
    ஏலத்திற்கு வந்த மறைந்த நடிகர் 'பால் வால்க்கரி'ன் கார்.. எவ்வளவுக்கு ஏலம் போனது?
    மறைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர் பயன்படுத்திய கார் ஏலத்திற்கு வந்தது

    ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் சீரிஸ் படங்களின் மூலம் உலகமெங்கும் புகழ் பெற்றவர், மறைந்த அமெரிக்க நடிகர் பால் வால்க்கர். அவர் பயன்படுத்திய '2000 நிஸான் ஸ்கைலைன் R34 GT-R' மாடல் காரானது ஏலம் விடப்பட்டது. இந்தக் காரை ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் படங்கள் வரிசையில், நான்காவது படத்தில் பயன்படுத்தியிருப்பார் பால் வால்க்கர். அந்தத் திரைப்படம் வெளியானபோதே பால் வால்க்கர் ஓட்டிய இந்தக் கார் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அந்தக் காரே தற்போது ஏலம் விடப்பட்டிருக்கிறது. ஏலத்தில் இந்தக் காரை 1.35 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 13.5 கோடி ரூபாய்) ஏலம் எடுத்திருக்கிறார் கார் ஆர்வலர் ஒருவர்.

    2/2

    R34 GT-R-ன் சிறப்பம்சங்கள்: 

    காட்ஸில்லா என கார் ஆர்வலர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்தக் கார் மாடல் 1992 முதல் 2002-ம் ஆண்டிற்குள் உருவாக்கப்பட்டது. அந்த நேரத்தில் மிகவும் கொண்டாடப்பட்ட கடைசி தலைமுறை RB26DETT இன்ஜினே இந்தக் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், ஆஃப்டர்மார்க்கெட் ட்யூனிற்கு மிகவும் வசதியான கார் மாடல் இது. அதுவும் இந்தக் கார் கொண்டாடப்படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. R32 மற்றும் R33 கார் மாடல்களின் அடுத்த கட்ட வெர்ஷனாக வெளியானதே இந்த R34 GT-R கார் மாடல். ஜப்பானில் இருந்து இந்தக் காரை கெய்ஸோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் வாங்கி பின்பு அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. பலகட்ட மாடிபிகேஷன்களுக்குப் பிறகே இந்தக் காரை அந்தப் படத்தில் பயன்படுத்தியிருப்பார் பால் வால்க்கர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    கார் கலக்ஷன்

    அமெரிக்கா

    புதிய பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டது லிங்க்டுஇன் நிறுவனம்! மைக்ரோசாப்ட்
    பாதுகாப்பான AI பயன்பாடு.. அமெரிக்க அதிபருடன் டெக் நிறுவன பிரதிநிதிகள் சந்திப்பு! செயற்கை நுண்ணறிவு
    குழந்தைகள் உணவு தயாரிப்பில் களமிறங்கிய அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி, மிச்செல் ஒபாமா ஊட்டச்சத்து
    உலகளாவிய மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு சாதகமான இடமாக இந்தியா வளர்ந்து வருகிறது இந்தியா

    கார் கலக்ஷன்

    ரோல்ஸ் ராய்ஸ் உருவாக்கிய பிரத்தியேகமான 'கோஸ்ட்' மாடல் கார்.. என்ன ஸ்பெஷல் தெரியுமா?  கார்
    டாப் 5 கிளாஸிக்கல் கார்கள் - சாட்ஜிபிடியின் லிஸ்ட்! ஆட்டோமொபைல்
    ஆட்டோ எக்ஸ்போ 2023 பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில விவரங்கள் மோட்டார்
    பிஎம்டபுள்யு ஐ விஷன் டீ: நொடிகளில் நிறத்தை மாற்றும் அதிசய கார் கார்
    அடுத்த செய்திக் கட்டுரை

    ஆட்டோ செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    Auto Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023