LOADING...
ஓலா ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! புதிதாக அறிமுகமான ஓலா இன்சைடர்ஸ் திட்டம்! ரூ.50,000 வரை லாபம் பெறலாம்
ஓலா எலக்ட்ரிக்கின் ஓலா இன்சைடர்ஸ் திட்டம் அறிமுகம்

ஓலா ஸ்கூட்டர் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! புதிதாக அறிமுகமான ஓலா இன்சைடர்ஸ் திட்டம்! ரூ.50,000 வரை லாபம் பெறலாம்

எழுதியவர் Sekar Chinnappan
Mar 01, 2026
05:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமான ஓலா எலக்ட்ரிக், தனது 10 லட்சத்திற்கும் அதிகமான பழைய வாடிக்கையாளர்களுக்காக ஓலா இன்சைடர்ஸ் என்ற புதிய திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் ஏற்கனவே ஓலா ஸ்கூட்டர் வைத்திருப்பவர்கள் புதிய வாகனங்களை வாங்கும்போதும், மற்றவர்களுக்குப் பரிந்துரை செய்யும்போதும் ரூ.50,000 வரை சலுகைகளைப் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

சலுகை

வாகன மேம்பாட்டிற்கு ரூ.50,000 சலுகை

பழைய ஓலா ஸ்கூட்டர்களை வைத்திருப்பவர்கள், ஓலாவின் சமீபத்திய ஜென் 3 எஸ்1 மாடல்கள் அல்லது ரோட்ஸ்டர் மோட்டார் சைக்கிள்களுக்கு மாற விரும்பினால், அவர்களுக்கு ரூ. 50,000 வரை பலன்கள் வழங்கப்படும். குறிப்பாக, 4680 பாரத் செல் தொழில்நுட்பம் கொண்ட புதிய வேரியண்ட்களை வாங்கும் போது இந்தச் சலுகை பெரிய அளவில் உதவும்.

பரிந்துரை

கூடுதல் வாகனங்கள் மற்றும் பரிந்துரை சலுகைகள்

புதிய வாகன மேம்பாடு மட்டுமின்றி, ஓலா இன்சைடர்ஸ் திட்டத்தில் இன்னும் சில முக்கிய சலுகைகளும் உள்ளன: ஏற்கனவே ஒரு ஓலா வாகனம் வைத்திருப்பவர், அதே பெயரில் இரண்டாவது வாகனத்தை வாங்கினால் ரூ. 20,000 வரை சலுகை பெறலாம். உங்கள் நண்பர் அல்லது உறவினருக்கு ஓலா வாகனத்தைப் பரிந்துரை செய்து, அவர்கள் வாகனத்தை டெலிவரி எடுக்கும்போது உங்களுக்கு ரூ.5,000 மதிப்பிலான ஓலா கிரெடிட்கள் வழங்கப்படும். உங்கள் பரிந்துரையின் மூலம் வாகனம் வாங்கும் புதிய வாடிக்கையாளருக்கும் ரூ.1,000 கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

Advertisement

நோக்கம்

ஓலாவின் நோக்கம் என்ன?

மில்லியன் கணக்கான ஓலா ரைடர்களை ஒருங்கிணைத்து, ஒரு வலுவான சமூகத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்று ஓலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், எளிதான முறையில் பழைய மாடல்களிலிருந்து புதிய தொழில்நுட்பத்திற்கு வாடிக்கையாளர்களை மாற்றவும் ஓலா திட்டமிட்டுள்ளது. தற்போதைய சந்தையில் நிலவும் கடும் போட்டிக்கு மத்தியில் இது ஒரு முக்கியமான உத்தியாக இது பார்க்கப்படுகிறது.

Advertisement