Page Loader
ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!
50 மையங்களை ஒரே நாளில் திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்

ஒரே நாளில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை திறந்த ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!

எழுதியவர் Siranjeevi
Mar 28, 2023
12:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய வாகனசந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை பெட்ரோல் வாகனத்திற்கு நிகராக வந்துவிட்டது. எலக்ட்ரிக் இருசக்கர வாகனத்தில் பிராதன இடத்தில் இருக்கும் ஓலா ஸ்கூட்டர்கள் பல அப்டேட்களை வழங்கி வருகின்றன. அதன்படி, ஓலா எலக்ட்ரிக் கடந்த ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 26) ஆம் தேதியில் இந்தியாவில் 50 எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்களை ஒரே நாளில் திறந்துள்ளது. இதுபற்றி ஓலா தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவில் அறிவித்துள்ளார். மேலும், இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் விசாகப்பட்டினம், ஜேபி நகர், சஹாரன்பூர், லக்னோ, கான்பூர், ஜோத்பூர், வாரணாசி போன்ற பல இடங்களில் திறந்துள்ளனர். கடந்த மாதம் தான் ஓலா நிறுவனம் ஓலா எஸ்1 ஏர் என்ற ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியிருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

ஒரே நாளில் ஓலாவின் 50 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் திறப்பு