Page Loader
பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல்
10 வருடம் ஆன வாகனங்களை அழிக்க தேவையில்லை மத்திய அரசு

பழைய வாகனங்களை அழிக்க தேவையில்லை! மத்திய அரசின் புதிய தகவல்

எழுதியவர் Siranjeevi
Mar 16, 2023
08:02 pm

செய்தி முன்னோட்டம்

பழைய வாகனங்களை அழிக்க வயது கட்டாயம் இல்லை என மத்திய அரசு வெளியிட்ட தகவலால் பழைய வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பழைய வாகன பயன்பாட்டால் இந்திய போக்குவரத்து துறைக்கு பெரிய தலைவலியாகவே இருந்துவருகிறது. காசு மாசுபாட்டை குறைக்க பழைய வாகன பயன்பாட்டை குறைக்க இந்திய அரசாங்கம் பழைய வாகனங்களை அழிக்க முன்னெடுத்து வந்தனர். அந்தவகையில், பழைய வாகனங்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மிகக் கடுமையான திட்டமே ஸ்கிராப்பிங் பாலிசி. இதனை கொண்டு வந்த நேரத்தில், தற்போது வாகன அழிப்பு திட்டத்திற்கு வயது முக்கியம் அல்ல என்கிற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகவே பல ஊடகங்களில் 10 ஆண்டு பழமை வாந்த வாகனங்களை கட்டாயம் அகற்றப்படவேண்டும் என கூறி வந்தனர்.

பழைய வாகனங்கள்

பழைய டிராக்டர் வாகனங்களை பயன்படுத்தலாம் - மத்திய அரசு தகவல்

ஆனால், இதற்கு இந்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், வாகனங்களை ஸ்கிராப்பிங் செய்ய கட்டாய வயது வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை என்றும் அது தெரிவித்து இருக்கின்றது. தொடர்ந்து, இந்த புதிய ஸ்கிராப்பிங் பாலிசியானது தன்னார்வ வாகன ஸ்கிராப்பையே ஊக்குவிக்கின்றது. அதேநேரத்தில், முன்னதாக கூறியதைப் போல், பழைய வாகனங்கள் உடல் தகுதி தேர்வை சந்திக்க வேண்டும். அதில், அந்த வாகனம் தோல்வி அடையும் பட்சத்தில், அதை கட்டாயம் ஸ்கிராப் செய்ய வேண்டும். இதுமட்டுமின்றி, தகுதியற்ற வாகனத்தை பயன்படுத்தி வந்ததற்கு அபராதம் விதிக்கப்படும் என முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.