LOADING...
பேமிலி கார்களில் ஒரு புதிய ராஜா அறிமுகம்! நிசான் கிராவிட் ரெனால்ட் ட்ரைபருக்கு கடும் போட்டியைக் கொடுக்குமா?
புதிய 7 சீட்டர் எம்பிவி நிசான் கிராவிட் காரின் முழு விபரங்கள்

பேமிலி கார்களில் ஒரு புதிய ராஜா அறிமுகம்! நிசான் கிராவிட் ரெனால்ட் ட்ரைபருக்கு கடும் போட்டியைக் கொடுக்குமா?

எழுதியவர் Sekar Chinnappan
Feb 16, 2026
12:52 pm

செய்தி முன்னோட்டம்

நிசான் நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிராவிட் எம்பிவி ரக காரை செவ்வாய் கிழமை (பிப்ரவரி 17, 2026) அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. ரெனால்ட்-நிசான் கூட்டணியின் CMFA+ பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார், நடுத்தரக் குடும்பங்களைக் கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சந்தையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் காருக்குப் போட்டியாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடிவமைப்பு

வெளிப்புறத் தோற்றம் மற்றும் வடிவமைப்பு

நிசான் கிராவிட் ஒரு உயரமான மற்றும் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 'C' வடிவிலான எல்இடி விளக்குகள், பிரம்மாண்டமான கிரில் மற்றும் செதுக்கப்பட்ட பம்பர் ஆகியவை நவீனத் தோற்றத்தைத் தருகின்றன. காரின் பக்கவாட்டில் ரூஃப் ரெயில்கள் (Roof rails) மற்றும் அலாய் வீல்கள் காரின் கம்பீரத்தை அதிகரிக்கின்றன. பின்பக்கத்தில் சுற்றிலும் வளைந்த எல்இடி டெயில் விளக்குகள் மற்றும் கட்டுக்கோப்பான பம்பர் காரின் ஸ்டைலை முழுமையாக்குகின்றன.

சிறப்பம்சங்கள்

உட்புற வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள்

இந்தக் காரில் ஏழு பேர் அமரக்கூடிய வசதி உள்ளது. இரண்டாவது வரிசை இருக்கைகளை முன்னும் பின்னும் நகர்த்திக் கொள்ளவும், மூன்றாவது வரிசை இருக்கைகளை மடித்துக் கொள்ளவும் முடியும். உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டியுடன் கூடிய டச்ஸ்கிரீன் மற்றும் அனைத்து வரிசைகளுக்கும் ஏசி வென்ட்கள் (Rear AC vents) வழங்கப்பட்டுள்ளன. உயர் ரக மாடல்களில் 360 டிகிரி கேமரா மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.

Advertisement

விவரங்கள்

என்ஜின் மற்றும் விலை விபரங்கள்

இந்தக் காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது மேனுவல் மற்றும் ஏஎம்டி ஆகிய இரண்டு கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வரும். எதிர்காலத்தில் சிஎன்ஜி மாடலும் அறிமுகம் செய்யப்படலாம். இதன் ஆரம்ப விலை சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாயிலிருந்து தொடங்கி, உயர் ரக மாடல்கள் 13 முதல் 14 லட்சம் ரூபாய் வரை (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement