Page Loader
கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்! 
ஏப்ரல் மாதம் வெளியான பைக்குகள், (KTM அட்வென்சர் 390 X)

கடந்த மாதம் வெளியான பைக்குகள் என்னென்ன? ஒரு குட்டி ரீகேப்! 

எழுதியவர் Prasanna Venkatesh
May 01, 2023
11:39 am

செய்தி முன்னோட்டம்

கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு பைக் நிறுவனங்கள் தங்களுடைய புதிய பைக்குகளை வெளியிட்டன. அந்த வெளியீடுகளின் ஒரு குட்டி ரீகேப் இது. ஏத்தர் 450X: பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் ஏத்தர் நிறுவனம், ஏற்கனவே விற்பனையில் இருந்த 450 ப்ளஸூக்கு பதிகாக 450X-ஐ இரண்டு வேரியண்ட்களாக வெளியிட்டது. 2023 யமஹா ஏராக்ஸ் 155: தங்களுடைய 150சிசி லைன்அப்பில் இருக்கும் ஏராக்ஸ் 155, R15, R15S மற்றும் MT-15 V2 ஆகிய மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷன்களை வெளியிட்டது யமஹா நிறுவனம். TVS ரெய்டர் சிங்கிள் சீட்: ஏற்கனவே விற்பனையில் இருக்கும் தங்கள் ரெய்டரின் ஸ்பிளிட் சீட் வெர்ஷனுடன் சிங்கிள் சீட் வெர்ஷனை ஒன்றையும் கூடுதலாக வெளியிட்டது டிவிஎஸ்.

ஆட்டோ

2023 சுஸூகி ஹயபூஸா: 

இந்தியாவின் புதிய மாசுக்கட்டுப்பாட்டு கொள்கைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹயபூசாவை ரூ.16.90 லட்சம் ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தியது சுஸூகி. ஹார்லி டேவிட்சன்: இந்தியாவில் விற்பனை செய்து வரும் தங்களுடைய லைன்-அப்பை முழுமையாக மறுசீரமைப்பு செய்தது ஹார்லி டேவிட்சன். பழைய பைக்குகளுக்கு புதிய அப்டேட்கள் முதல் நைட்ஸ்டர் ஸ்பெஷல் புதிய வெளியீடு வரை பல அறிவிப்புகளை வெளியிட்டது. KTM 390 அட்வென்சர் X: ஸ்டான்டர்டான 390 அட்வென்சரில் இருந்து சில வசதிகளை மட்டும் குறைத்து விட்டு அனைவரும் வாங்கும் வகையில், அதனை விட குறைவான விலையில் 390 அட்வென்சர் X பைக்கை வெளியிட்டது KTM.