Page Loader
மாருதி சுஸுகி இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்க உள்ளது
2025ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒசாகா எக்ஸ்போவில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது

மாருதி சுஸுகி இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்க உள்ளது

எழுதியவர் Venkatalakshmi V
Feb 15, 2024
06:22 pm

செய்தி முன்னோட்டம்

மாருதி சுஸுகி தனது ஜப்பானிய தாய் நிறுவனமான சுஸுகியுடன் இணைந்து இந்தியாவில் பறக்கும் கார்களை தயாரிக்கவுள்ளது. அந்நிறுவனத்தின் எலக்ட்ரிக் வெர்டிகல் டேக்- ஆஃப் மற்றும் தரையிறங்கும் (eVTOL) விமானம் 'SkyDrive' என்று அழைக்கப்படும். இது ட்ரோன்கள் மற்றும் பாரம்பரிய ஹெலிகாப்டர்களுக்கு இடையிலான இடைவெளியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெறும் ஒசாகா எக்ஸ்போவில் இந்த வாகனம் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. SkyDrive இந்தியாவில் தொடங்குவதற்கு முன்பு ஜப்பானிய மற்றும் அமெரிக்க சந்தைகளை குறிவைக்கும். மாருதி சுஸுகி கடந்த மாதம் குஜராத்தில் ஸ்கை டிரைவின் கான்செப்ட் மாடலை வெளியிட்டது. இது மல்டி ரோட்டார் விமானமாகும். இது நமது சாலைகளில் ஓலா மற்றும் உபெர் வண்டிகளைப் போலவே வணிக ரீதியாக ஏர் டாக்ஸியாகப் பயன்படுத்தப்படலாம்.

SkyDrive வரம்பு

அதிகரிக்கும் SkyDrive இன் உச்சவரம்பு 

சுஸுகி மோட்டார்ஸின் உதவி மேலாளர் கூறுகையில், பொருளாதார காரணங்களுக்காக இந்தியாவில் பறக்கும் காரை தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர், SkyDrive இன் வேகம் 2029ஆம் ஆண்டில்தொடக்கத்தில் இருந்து 15 கிமீ வேகம் 30 கிமீ ஆகவும், இறுதியில் 2031 க்குள் 40 கிமீ ஆகவும் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இத்தகைய வரம்பு இந்தியாவின் பரந்த புவியியல் மற்றும் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும். Maruti Suzuki நிறுவனம், 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியுடன் இணைவதற்கும், உள்ளூர் உற்பத்தி நன்மைகளைப் பயன்படுத்தி, பொருளாதார நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்கும், இந்தியாவில் உற்பத்தி வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறது. நிறுவனம் இந்தியாவின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளரான DGCA உடன் விவாதித்து, சாத்தியக்கூறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.