
சூரிய சக்தி வாகனங்கள் உற்பத்திக்கு ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளது மாருதி சுஸுகி
செய்தி முன்னோட்டம்
மாருதி சுஸுகி நிறுவனம், சூரிய சக்தி மற்றும் உயிரி எரிவாயுவை மையமாகக் கொண்ட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.450 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
2024ஆம் நிதியாண்டில் மாருதி சுஸுகி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் ரூ.120.8 கோடி முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 2025ஆம் நிதியாண்டு முதல் இந்த முதலீட்டை நான்கு மடங்காக அதிகரிக்க மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பல புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் நிலையான செயல்பாடுகளை அதிகரிக்க தங்கள் நிறுவனம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக மாருதி சுஸுகியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஹிசாஷி டேகுச்சி தெரிவித்துள்ளார்.
மாருதி
2026க்குள் சூரிய ஆற்றல் திறனை 78.2 மெகாவாட்டாக அதிகரிக்க திட்டம்
"2030-31 ஆம் ஆண்டிற்குள் எங்களின் உற்பத்தித் திறனை சுமார் 2 மில்லியனிலிருந்து 4 மில்லியனாக உயர்த்தி, எங்களது வாகனங்கள் அனைத்தயும் நிலையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு ஏற்றவாறு மாற்றும் முயற்சிகளை விரைவுபடுத்தி உள்ளோம்" என்று டேகுச்சி கூறியுளளார்.
மாருதி சுஸுகி நிறுவனம் தனது சூரிய ஆற்றலை இந்த நிதியாண்டில் 43.2 மெகாவாட்டாக விரிவுபடுத்தியுள்ளது.
அதன் மானேசர் ஆலையில் 15 மெகாவாட்டையும் அதன் வரவிருக்கும் கார்கோடா ஆலையில் 20 மெகாவாட்டையும் சேர்ப்பதன் மூலம் 2026 நிதியாண்டில் தனது திறனை 78.2 மெகாவாட்டாக அதிகரிக்க மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.