சன்ரூஃபுடன் கூடிய மஹிந்திரா 5 டோர் தார்.. எப்போது வெளியீடு?
இந்தியாவில் 5-டோர் ஜிம்னியை வரும் ஜூன் மாதம் அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி. அதற்கு போட்டியாக புதிய 5-டோர் தாரை உருவாக்கி வருகிறது மஹிந்திரா. இந்த புதிய 5 டோர் தாரை அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். 3 டோர் தாரைப் போலவே, ஆனால் கூடுதல் இடவசதி மற்றும் புதிய சில வசதிகளுள் இந்த 5 டோரை உருவாக்கி வருகிறது மஹிந்திரா. புதிய தாரை இந்த ஆண்டே வெளியிடலாம் தான், எனினும் நிலுவையில் இருக்கும் ஆர்டர்களை முதலில் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மஹிந்திரா. இந்த புதிய 5 டோர் தாரை தற்போது இந்திய சாலைகளில் மஹிந்திரா சோதனை செய்து வருகிறது. அப்படியான சோதனையின் போது சன்ரூஃபுடன் கூடிய மாடல் ஸ்பை ஷாட்டில் சிக்கியிருக்கிறது.
என்னென்ன மாற்றங்கள்?
5 டோர் தாரில் சாஃப்ட் டாப் கிடையாது, ஹார்டு டாப் மட்டுமே. முன்பக்க சென்டர் ஆர்ம்ரெஸ்ட், மேம்படுத்தப்பட்ட டச்ஸ்கிரீன் இன்ஃபோடெய்ன்மென்ட் சிஸ்டம் மற்றும் இரண்டாவது வரிசையில் இரண்டு தனித்தனி சீட்டிம் ஆப்ஷன் என பல புதுமைகளை 5 டோர் தாரில் கொடுக்கவிருக்கிறது மஹிந்திரா. புதிய 5 டோர் மஹிந்திராவில் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின்களைக் கொண்ட வேரியன்ட்களை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது அந்நிறுவனம். 5 டோர் தார் மட்டுமல்ல XUV300 காம்பேக்ட் எஸ்யூவி ஒன்றையும் இந்தியாவிற்காக உருவாக்கி வருகிறது மஹிந்திரா நிறுவனம். அந்த மாடலையும் அடுத்த ஆண்டே வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள்.