லெக்சஸ் NX 2027 சொகுசு கார் அறிமுகம்: பெட்ரோல் வேரியண்ட் நிறுத்தம், ஹைப்ரிட் மாடலாக மாற்றம்
செய்தி முன்னோட்டம்
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான லெக்சஸ், தனது புகழ்பெற்ற NX க்ராஸ்ஓவர் காரின் 2027 மாடலை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாக பெட்ரோல் மாடலை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, ஹைப்ரிட் மற்றும் பிளக்-இன் ஹைப்ரிட் (PHEV) பதிப்புகளில் மட்டுமே இந்த காரை லெக்சஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது. புதிய 2027 லெக்சஸ் NX கார் NX 350h (ஹைப்ரிட்) மற்றும் NX 450h+ (பிளக்-இன் ஹைப்ரிட்) ஆகிய 2 வேரியண்ட்டுகளில், Premium, Premium+, F Sport மற்றும் Luxury என 4 பிரிவுகளில் விற்பனைக்கு வருகிறது.
மாற்றங்கள்
எஞ்சின் ஆற்றல், செயல்திறன் மற்றும் வடிவமைப்பு மாற்றங்கள்
பகல்நேர விளக்குகள்(DRL) மற்றும் டர்ன் சிக்னல்களை உள்ளடக்கிய புதிய இரட்டை வரி எல்.இ.டி முகப்பு விளக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
லெக்சஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக 'Double L' வடிவ பின்பக்க எல்.இ.டி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
காரின் உட்புறத்தில் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.0 இன்ச் டச்ப்ரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றுள்ளன.
இதன் ஒருங்கிணைந்த எஞ்சின் ஆற்றல் 244 குதிரைத்திறனாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் முன்பக்க மோட்டார் 160hp ஆற்றலையும், ஆல்-வீல் டிரைவ் மாடலின் பின்பக்க மோட்டார் 54hp ஆற்றலையும் வழங்குகின்றன.
புதிய லித்தியம்-அயன் பேட்டரி பேக் மூலம் இதன் ஒட்டுமொத்த ஆற்றல் 304hp-லிருந்து 324hp ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த மாடல் வெறும் மின்சார ஆற்றலில் மட்டுமே சுமார் 64கி.மீ தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.