
இந்தியாவில் வெளியானது லெக்சஸின் புதிய RX ஹைபிரிட் எஸ்யூவி!
செய்தி முன்னோட்டம்
புதிய RX ஹைபிரிட் எஸ்யூவியை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ் நிறுவனம். இந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் தான் இந்த RX மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது லெக்சஸ்.
இந்த RX ஹைபிரிட்டில் இரண்டு வேரியன்ட்களை வெளியிட்டிருக்கிறது லெக்சஸ்.
RX350h சொகுசு வேரியன்ட் ஒன்றையும், அதிக செயல்திறன் கொண்ட RX500h F-ஸ்போர்ட்+ வேரியன்ட் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.
RX350h சொகுசு வேரியன்டை ரூ.95.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், செயல்திறனை மையமாகக் கொண்ட RX500h F-ஸ்போர்ட்+ வேரியன்டை ரூ.1.18 கோடி எக்ஸ்-ஷோரூம் விலையிலும் வெளியிட்டிருக்கிறது லெக்சஸ்.
இந்தியாவில் மெர்சிடீஸ் பென்ஸ் GLE, BMW X5, ஜீப் கிராண்டு செரோக்கி, ஜாகுவார் F-பேஸ் மற்றும் ஆடி Q7 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இந்த RX மாடல் கார்களை களமிறக்கியிருக்கிறது லெக்சஸ்.
ஆட்டோ
இன்ஜின் மற்றும் பிற வசதிகள்:
இந்த RX மாடல்களில் ஹெட்ல்-அப் டிஸ்பிளே, 14 இன்ச் டச்ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, வயர்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகிய வசதிகளைக் கொடுத்திருக்கிறது லெக்சஸ்.
RX350h வேரியன்டில் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் கூடிய 2.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜினும், எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் சேர்த்து 250hp பவர் மற்றும் 242Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனுடன் இருக்கிறது.
RX500h F-ஸ்போர்ட்+ வேரிடன்டில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸூடன் கூடிய 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும், எலெக்ட்ரிக் மோட்டாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் சேர்ந்து 371hp பவர் மற்றும் 460Nm டார்க்கை வெளிப்படுத்தும் திறனுடன் இருக்கிறது.