புதிய '390 அட்வென்சர் X' பைக்கை வெளியிட்டுள்ளது கேடிஎம்!
செய்தி முன்னோட்டம்
390 அட்வென்சர் பைக்கை கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம். அதன் பிறகு வருடாவருடம் அதன் அப்டேட்டட் மாடல்களும் வெளியிடப்பட்டது. கடைசியாக கடந்த ஆண்டு ரூ.3.38 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அப்டேட் செய்யப்பட்ட 390 அட்வென்சர் மாடலை வெளியிட்டது கேடிஎம்.
தற்போது அதைப் போலவே, ஆனால் விலை குறைவான 390 அட்வென்சர் X பைக்கை இந்தியாவில் வெளியிட்டிருக்கிறது கேடிஎம். வெகுவான பயனர்களைச் சென்றடைய வேண்டும் என்றே இந்த 390 அட்வென்டரின் இந்த எண்ட்ரி-லெவல் பைக்கை இந்தியாவில் களமிறக்கியிருக்கிறது கேடிஎம்.
ரூ.2.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் இந்த புதிய பைக் வெளியாகியிருக்கிறது. ஆனால், விலைக் குறைக்குப்புக்கு ஏற்ப பல வசதிகளையும் இந்த புதிய பைக்கில் நீக்கியிருக்கிறது கேடிஎம்.
ஆட்டோமொபைல்
என்னென்ன வசதிகளுடன் வெளியாகியிருக்கிறது?
டிராக்ஷன் கன்ட்ரோல், க்விக் ஷிப்டர் மற்றும் கார்னரிங் ஏபிஎஸ் உள்ளிட்ட வசதிகளை புதிய பைக்கில் கேடிஎம் கொடுக்கவில்லை. ஆனால், டூயல் சேனல் ஏபிஎஸ் வசதியை அப்படியே வைத்திருக்கிறது.
மேற்கூறிய வசதிகளைத் தவிர இன்ஜின், டிசைன், எல்இடி விளக்குகள் மற்றும் சஸ்பென்ஷன் கூட 390 அட்வென்சரில் இருக்கும் அதே வசதிகள் தான். கலர் ஆப்ஷன்கள் கூட அதே ஆரஞ்சு மற்றும் டார்க் கால்வனோ கலர் ஆப்ஷன்களைக் கொடுத்திருக்கிறது கேடிஎம்.
ரூ.3 லட்சத்திற்குள் தற்போது விலைக்கேற்ற பைக்காக மாறியிருக்கிறது இந்த 390 அட்வென்சர் X. இன்னும் சொல்லப்போனால், கேடிஎம் 250 அட்வென்சரை விட வெறும் ரூ.35,000 மட்டுமே அதிகமாக இருக்கிறது.