Page Loader
புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன?
இந்தியாவில் வெளியானது புதிய 'கேடிஎம் 390 அட்வென்சர் V'

புதிய '390 அட்வென்சர் V' பைக்கை இந்தியாவில் வெளியிட்டது கேடிஎம்.. விலை என்ன?

எழுதியவர் Prasanna Venkatesh
May 02, 2023
02:59 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த மாதம் தான் 390 அட்வென்சர் X மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது கேடிஎம் நிறுவனம். தற்போது அதே வரிசையிலேயே '390 அட்வென்சர் V' மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறது அந்நிறுவனம். பார்வைக்கு 390 அட்வென்சரைப் போலவே எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது அட்வென்சர் V. ஆனால், ஸ்டான்டர்டான மாடலை விட 25மிமீ குறைவாக 830மிமீ சீட் உயரத்தைக் கொண்டிருக்கிறது அட்வென்சர் V. ஸ்டான்டர்டான 390 அட்வென்சரில் பயன்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப்பைப் பயன்படுத்தாமல், 390 டியூக்கில் பயன்படுத்தப்பட்ட சஸ்பென்ஷன் செட்டப்பை அட்வென்சர் V-யில் பயன்படுத்தியிருக்கிறது கேடிஎம். இதன் காரணமாகவே சீட்டின் உயரமும் குறைவாக இருக்கிறது. ஸ்டான்டர்டான கேடிஎம்மின் விலையான ரூ.3.39 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலேயே வெளியாகியிருக்கிறது இந்தப் புதிய 'கேடிஎம் 390 அட்வென்சர் V'.

கேடிஎம்

இன்ஜின் மற்றும் பிற வசதிகள்: 

390 சீரிஸின் புதிய V வெர்ஷனில் முக்கியமான மாற்றம் என்றால், அது இன்ஜின் தான். கடந்த ஏப்ரல் மாதம் முதல் BS6-ன் Phase 2 விதிமுறைகள் இந்தியாவில் அமலுக்கு வந்தன. அந்தப் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய 43hp பவர் மற்றும் 37Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 373சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜினைப் பெற்றிருக்கிறது 390 அட்வென்சர் V. 6 ஸ்பீடு கியர்பாக்ஸூடன், க்விக்ஷிப்டர் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக், டூயல் சேனல் ABS-ஐ பெற்றிருக்கிறது அட்வென்சர் V. அதோடு ட்ராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் ரைடிங் மோடு வசதிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. முன்பக்கம் 43மிமீ இன்வெர்டட் ஃபோர்க்குகளும், பின்பக்கம் மோனோ ஷாக்கும் சஸ்பென்ஷன் செட்டப்பாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.