மேம்படுத்தப்பட்ட 790 அட்வென்ச்சர் மாடலை மீண்டும் களமிறக்கும் கேடிஎம்
கேடிஎம் 2017 இல் 790 அட்வென்ச்சர் என்ற இருசக்கர வாகன மாடலை அறிமுகப்படுத்தியபோது, அது மிடில்வெயிட் அட்வென்ச்சர் பைக் பிரிவில் புதிய தரத்தை உருவாக்கியது. அப்போது, மரியாதைக்குரிய ஆஃப்-ரோடு திறன் கொண்ட இலகுரக மற்றும் வேகமான சாகச பைக்கை நீங்கள் விரும்பினால், சுஸுகி வி-ஸ்டோர்ம் 650 அல்லது ஒருவேளை பிஎம்டபிள்யூ எப் 800 ஜிஎஸ் போன்ற வேறு சில தேர்வுகளும் வாடிக்கையாளர்களுக்கு இருந்தன. இதனால் கடும் போட்டியை சந்தித்தாலும், கேடிஎம் 890 அட்வென்ச்சர் ஆர் மூலம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த மாடல் வெற்றி பெற்றாலும், பழைய 790 அட்வென்ச்சர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வாடிக்கையாளர்களை கவராத நிலையில், அதை மேம்படுத்தி 2024 மாடலாக மீண்டும் களமிறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேடிஎம் 790 அட்வென்ச்சர் 2024 மாடல் சிறப்பம்சங்கள்
2024 கேடிஎம் 790 அட்வென்ச்சர் அதன் இணை மாடலாக அறியப்படும் 890 அட்வென்ச்சர் ஆர் போன்றே பிரீமியம் அம்சங்களைப் பெறுகிறது. இது பைக்கின் ரைடு மோடுகளுடன் இணைந்து செயல்படும் தானியங்கி ஏபிஎஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட கிளட்ச், பெரிய ஏர் பேக்ஸ் மற்றும் 6டி சென்சார் ஆகியவை பைக்கின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. என்ஜினை பொறுத்தவரை, 799சிசி, திரவ-குளிரூட்டப்பட்ட, எரிபொருள் உட்செலுத்தப்பட்ட, இணையான-இரட்டை என்ஜினை கொண்டுள்ளது. இது சிஎப் மோட்டோ என்ற சீன நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. மென்மையான செயல்திறன் மற்றும் உமிழ்வு இணக்கத்திற்கான மேம்பாடுகளைக் கொண்டுள்ளது. மாடல் வெளியாவது உறுதி செய்யப்பட்டாலும், அதன் விலை மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.