மாருதி டாடா நிறுவனத்துக்கு சவால் விடும் புதிய கார்!
வளர்ந்து வரும் இந்திய வாகனச் சந்தையில், பிரபலமான காரில் ஒன்று கியா சொனெட் இந்த கார் அடுத்த சிஎன்ஜி வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்ய கியா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த கார் அறிமுகத்திற்கு முன் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளின் இரண்டாவது கட்டம் சோதனை செய்யும். அதன்பின் இந்த புதிய மாடலை கியா நிறுவனம் இந்திய சாலைகளில் தீவிரமாக சோதனை செய்து வருகிறது. எனவே, கியா சொனெட் சிஎன்ஜி காரில், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படும் எனக்கூறப்படுகிறது. இந்த கார், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா சிஎன்ஜி மற்றும் டாடா நெக்ஸான் சிஎன்ஜி ஆகிய கார்களுடன் கியா சொனெட் சிஎன்ஜி போட்டியிடும்.
பல அம்சங்களுடன் வெளிவரும் கியா சொனெட் - தனி சிறப்பு என்ன?
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த கார்களும் விரைவில் விற்பனைக்கு வெளிவருகின்றன. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரையில், கியா சொனெட் சிஎன்ஜி மாடலில் மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக இந்திய சந்தையில் சிஎன்ஜி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், பல நிறுவனங்கள் இந்த காரை போட்டி போட்டு அறிமுகம் செய்கின்றன. மேலும், இந்தியாவின் சிஎன்ஜி கார் சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் ஆதிக்கம் செலுத்தினாலும், எதிர்காலத்தில் அதற்கு மிக கடுமையான போட்டி ஏற்படுத்த பல நிறுவனங்களின் ஆதிக்கம் தொடர்கிறது.