
Sonet மாடலில் Aurochs எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா!
செய்தி முன்னோட்டம்
சோனெட் மாடலின் ஆராக்ஸ் எடிஷனை வெளியிட்டிருக்கிறது கியா. அந்த மாடலின் HTX வேரியன்டிலேயே இந்த கியா சோனெட் ஆராக்ஸ் (Kia Sonet Aurochs) எடிஷனை வெளியிட்டிருக்கிறது.
இன்ஜின் மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் இன்றி காஸ்மெடிக் மாற்றங்களுடன் மட்டும் வெளியாகியிருக்கிறது ஆராக்ஸ் எடிஷன்.
1.0 லிட்டர் டர்போபெட்ரோல் iMT, 1.0 லிட்டர் டர்போபெட்ரோல் DCT, 1.5 லிட்டர் டர்போடீசல் iMT மற்றும் 1.5 லிட்டர் டர்போடீசல் AT என நான்கு HTX வேரியன்ட்களாக வெளியாகியிருக்கிறது ஆராக்ஸ் எடிஷன்.
முன்பக்க ஸ்கிட் ப்ளேட்களில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், முன்பக்க பம்பர், கிரில், டோர் சில்ஸ், ரியர் ஸ்கிட் ப்ளேட் மற்றும் வீல்களின் நடுவில் டேஞ்சரின் நிற ஸ்டைலிங் கொடுக்கப்பட்டிருக்கிறது.
கியா
இன்ஜின் மற்றும் விலை:
HTX வேரியன்டில் கொடுக்கப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் ஆகிய இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களிலுமே புதிய ஆராக்ஸ் வேரியன்டை வெளியிட்டிருக்கிறது கியா.
இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கியர் ஆப்ஷனும், டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 7-ஸ்பீடு டூயல்-கிளட்ச் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனும், டர்போ பெட்ரோல் இன்ஜினுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
விலை:
சோனெட் ஆராக்ஸ் எடிஷன் 1.0T iMT - ரூ.11.85 லட்சம்
சோனெட் ஆராக்ஸ் எடிஷன் 1.0T DCT - ரூ.12.39 லட்சம்
சோனெட் ஆராக்ஸ் எடிஷன் 1.5 iMT - ரூ.12.65 லட்சம்
சோனெட் ஆராக்ஸ் எடிஷன் 1.5 AT - ரூ.13.45 லட்சம்