சீட் கிடையாது.. ஜன்னலும் கிடையாது: ஜப்பானின் விசித்திர புல்லட் ரயில்! இந்தியாவிலும் விரைவில் வரப்போகுது
செய்தி முன்னோட்டம்
அதிவேகம் மற்றும் துல்லியமான நேரத்திற்கு பெயர்பெற்ற ஜப்பானின் 'ஷின்கான்சென்' (Shinkansen) புல்லட் ரயில் நெட்வொர்க்கில், ஒரு புதிய புரட்சியாக இருக்கைகள் இல்லாத முதல் சரக்கு புல்லட் ரயிலை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது. அதே வேளையில், இந்தியாவும் தனது புல்லட் ரயில் கனவை நனவாக்க அடுத்தடுத்த பெரிய திட்டங்களை அறிவித்துள்ளது.
புல்லட் ரயில்
ஜப்பானின் இருக்கைகள் இல்லா புல்லட் ரயில்
கிழக்கு ஜப்பான் ரயில்வே நிறுவனம் முற்றிலும் சரக்குகளை கையாளுவதற்காக இந்த ரயிலை வடிவமைத்துள்ளது. 7 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் பயணிகள் இருக்கைகள் மற்றும் ஜன்னல்கள் கிடையாது. பெட்டிகளுக்குள் பெட்டிகள் நழுவாமல் இருக்க சிறப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடல் உணவுகள், காய்கறிகள் மற்றும் நுட்பமான மின்னணு உதிரிபாகங்களை விரைவாக கொண்டு செல்ல இது பயன்படும். ஓட்டுநர் பற்றாக்குறையை சமாளிக்க இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 23 முதல் மோரியோகா மற்றும் டோக்கியோ இடையே இந்த ரயில் தனது சேவையை தொடங்குகிறது.
இந்தியா
இந்தியாவின் புல்லட் ரயில் - தற்போதைய நிலை
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை -அகமதாபாத் (508 கி.மீ) பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகின்றன. மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரயில், பயண நேரத்தை வெறும் 2 மணி நேரமாக குறைக்கும். இதில் 7 கி.மீ தூரத்திற்கு கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை மற்றும் 25 நதிப் பாலங்கள் அமைக்கப்படுகின்றன. சூரத் - வாபி இடையிலான முதல் கட்ட பகுதி விரைவில் திறக்கப்பட உள்ளது. முழுமையான சேவை 2029 டிசம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2026-27 பட்ஜெட் உரையில், இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்த 5 ஆண்டுகளில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்க முன்மொழிந்துள்ளார்: