
இந்தியாவில் புதிய 'RS 457' பைக்கை அறிமுகப்படுத்திய ஏப்ரிலியா
செய்தி முன்னோட்டம்
இத்தாலியைச் சேர்ந்த பைக் தயாரிப்பாளரான ஏப்ரிலியா இந்தியாவில் புதிய ப்ரீமியம் பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே இந்தப் புதிய பைக் குறித்த தகவல்கள் வெளியான நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக 'RS 457' பைக்கை அறிமுகப்படுத்தியிருக்கிறது ஏப்ரிலியா.
5.0 இன்ச் TFT டிஸ்பிளே, பேக்லிட் ஸ்விட்ச்கியர், ரைடு பை வயர் மற்றும் மூன்று நிலைகள் கொண்ட டிராக்ஷன்ன் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இந்த RS 457ல் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முன்பக்கம் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் USD சஸ்பென்ஷனும், பின்பக்கம் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்டப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தங்களுடைய லைன்அப்பில் உள்ள 660 மாடலின் சிறிய வெர்ஷனாக இந்த RS 457யை வெளியிடவிருக்கிறது ஏப்ரிலியா.
ஏப்ரிலியா
ஏப்ரிலியா RS 457: வெளியீடு எப்போது?
இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இன்ஜின் குறித்த தகவல்களை ஏப்ரிலியா இன்னும் வெளியிடவில்லை. எனினும், இந்த பைக்கில் 48hp பவரை வெளிப்படுத்தக்கூடிய, சிலிண்டருக்கு நான்கு வால்வுகளைக் கொண்ட, லிக்விட் கூல்டு இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்-அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக்ஷிப்டன் ஆகிய வசதிகள் கொடுக்கப்படவும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் இந்தியன் மோடோGP போட்டியின் போது இந்தப் புதிய பைக்கை ஏப்ரிலியா வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேடிஎம் RC 390-க்குப் போட்டியாக வெளியாகவிருக்கும் இந்த பைக்கின் விலை, அதனை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.