Page Loader
தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் 

தமிழகத்தில் 26,180 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கும் ஹூண்டாய் நிறுவனம் 

எழுதியவர் Sindhuja SM
Jan 09, 2024
05:34 pm

செய்தி முன்னோட்டம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2032-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ரூ.6,180 கோடியை கூடுதலாக முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் முதலீடு செய்த தொகை ரூ.26,180 கோடியாக உயரும். இந்த முன்முயற்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனமும், தமிழக அரசும் கையெழுத்திட்டுள்ளன. இது குறித்து பேசியிருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் எம்.டி மற்றும் சி.இ.ஓஅன்சூ கிம் "மாநில அரசாங்கத்துடனான இந்த ஒத்துழைப்பு ஒரு வலுவான ஹைட்ரஜன் தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கு உதவும்" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக, ஹூண்டாய் நிறுவனம் EV உற்பத்தி, சார்ஜிங் உள்கட்டமைப்பு மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்க 10 ஆண்டுகளில் ரூ.20,000 கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தது.

சஜிவ்கின்ள

 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருக்கும்  வியட்நாம் நிறுவனம் 

தற்போது ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து 'ஹைட்ரஜன் வேலி இன்னோவேஷன் ஹப்' என்ற முன்முயற்சியை தொடங்குவதற்காக ரூ.180 கோடியை ஹூண்டாய் நிறுவனம் ஒதுக்க உள்ளது. கூடுதலாக, தமிழ்நாடு அரசு மற்றும் ஐஐடி மெட்ராஸுடன் இணைந்து ஹூண்டாய் நிறுவனம் மற்றொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டுள்ளது. இது ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உள்ளூர்மயமாக்குவதில் கவனம் செலுத்தும் ஒரு திட்டமாகும். இந்த திட்டங்களால் தமிழகத்தில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் இது திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், வியட்நாம் EV தயாரிப்பாளரான VinFast நிறுவனமும் தமிழ்நாடு அரசாங்கத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து மின்சார வாகனத்தை உற்பத்தி செய்யவும் ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யவுள்ளது.