Page Loader
2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்
2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்

2024ம் ஆண்டிற்கான ICOTY மற்றும் IMOTY விருதை வென்ற கார் மற்றும் பைக்

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 21, 2023
03:47 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் அந்த ஆண்டு வெளியான சிறந்த பைக் மற்றும் கார் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 2024 Indian Motorcycle Of The Year (IMOTY) மற்றும் 2024 Indian Car Of The Year (ICOTY) விருது பெறும் பைக் மற்றும் காரின் பெயர்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஹிமாலயன் பைக் மாடலானது இந்த ஆண்டு விருது பெறும் பைக்காகத் தேர்வாகியிருக்கிறது. இந்த விருதுக்கு ஹார்லி டேவிட்சன் X440, கேடிஎம் 390 ட்யூக், ட்ரையம்ப் ஸ்கிராம்ப்ளர் 400X, ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியார் 650 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி RTR 310 உள்ளிட்ட பைக்குகள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோ

ICOTY விருது பெற்ற கார்: 

2024 Indian Car Of The Year விருதை, இந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் தட்டிச் சென்றிருக்கிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு சிட்ரன் C3 ஏர்கிராஸ், ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் வெர்னா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் உள்ளிட்ட மாடல்கள் போட்டியிட்டன. மேற்கூறிய விருதுகளைப் போது ICOTY 2024 Green Car Of The Year விருதை ஹூண்டாயின் எலெக்ட்ரிக் காரான அயானிக் 5 (IONIQ 5) தட்டிச் சென்றிருக்கிறது. இந்த விருதுக்கு BYD அட்டோ 3, சிட்ரன் eC3, மெர்சிடீஸ் பென்ஸ் EQE, எம் காமெட் மற்ரும் வால்வோ C40 ரீசார்ஜ் உள்ளிட்ட கார்கள் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.