ஹூண்டாய் கார் வாங்குவோருக்கு ஷாக்! செப்டம்பர் 1 முதல் விலை உயர்வு; எந்தெந்த மாடலுக்கு எவ்வளவு உயரும் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா, வரும் செப்டம்பர் 2026 முதல் தனது அனைத்துப் பயணிகள் வாகனங்களின் விலையையும் 1 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் மேற்கொள்ளும் மூன்றாவது விலை உயர்வு இதுவாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல் மற்றும் வேரியன்ட்களுக்கு ஏற்ப இந்த விலையேற்றம் தோராயமாக ₹7,700 முதல் ₹23,600 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காரணங்கள்
விலை உயர்வுக்குக் கூறப்படும் முக்கியக் காரணங்கள்
வாகனத் தயாரிப்பிற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு, செயல்பாட்டு செலவுகள் அதிகரிப்பு மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழல் ஆகியவையே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
செலவு அதிகரிப்பைக் நிறுவனம் தனது சொந்த நிதியிலிருந்து ஓரளவு ஏற்றுக்கொண்ட போதிலும், சுமையைக் குறைக்க பகுதித் தொகையை வாடிக்கையாளர்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக ஹூண்டாய் விளக்கம் அளித்துள்ளது.
சரியான நேரம்
கார் வாங்க இது சரியான நேரமா?
விலை உயர்வுக்கு முன் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் காரை முன்பதிவு செய்வதன் மூலம் சில ஆயிரம் ரூபாய்களை சேமிக்க முடியும்.
குறிப்பாக எக்ஸ்-ஷோரூம் விலை குறையும் போது பதிவுச் சான்றிதழ், காப்பீடு மற்றும் கடன் தொகையின் வட்டியும் குறையும்.
இருப்பினும், பண்டிகைக் காலக் தள்ளுபடிகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ்களை ஒப்பீடு செய்து சிறந்த சலுகையுடன் வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு புத்திசாலித்தனமான தேர்வாக அமையும்.