LOADING...
மழை பெய்யும்போது கார் கண்ணாடி மங்கலாகுதா? 5 நிமிடத்தில் சரிசெய்வதற்கான எளிய ட்ரிக்!
மழை பெய்யும்போது கார் கண்ணாடி மங்கலாவதை சரி செய்வதற்கான எளிய ட்ரிக்ஸ்

மழை பெய்யும்போது கார் கண்ணாடி மங்கலாகுதா? 5 நிமிடத்தில் சரிசெய்வதற்கான எளிய ட்ரிக்!

எழுதியவர் Sekar Chinnappan
Jun 18, 2026
07:07 pm

செய்தி முன்னோட்டம்

மழைக்காலத்தில் கார் ஓட்டும்போது விண்ட்ஷீல்ட் எனப்படும் முன்பக்கக் கண்ணாடி மற்றும் பக்கவாட்டுக் கண்ணாடிகளில் பனி மூட்டம் போல புகை மூடுவது மிகவும் சாதாரணமான ஒரு விஷயம். ஆனால், இதனால் முன்னால் செல்லும் வாகனங்கள் சரியாகத் தெரியாமல் போய், பல நேரங்களில் பெரிய விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவே முக்கியக் காரணமாக அமைந்துவிடுகிறது. கார் கண்ணாடியில் இப்படி மங்கலாகப் புகை படிவதைத் தடுத்து, வெறும் 5 நிமிடங்களில் கண்ணாடியை எப்படித் தெளிவாக மாற்றுவது என்பதற்கான சில எளிய அறிவியல் தந்திரங்களை இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

கவனத்தில் கொள்ளவேண்டியவை

முக்கிய சிறப்பம்சங்கள்

காரின் உட்புறத்திற்கும் வெளிப்புறத்திற்கும் இடையே உள்ள வெப்பநிலையின் மாற்றமே கண்ணாடி மங்கலாகக் காரணம். காரில் உள்ள டிஃபாகர் மற்றும் ஏசி செட்டிங்ஸை சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் இதை உடனே சரிசெய்யலாம். அவசரக் காலங்களில் ஷாம்பு அல்லது உருளைக்கிழங்கைக் கொண்டும் கண்ணாடியில் பனி படிவதைத் தடுக்க முடியும்.

காரணங்கள்

கண்ணாடி ஏன் மங்கலாகிறது?

மழை பெய்யும்போது காரின் வெளிப்புறக் காற்று மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதே நேரத்தில், காரின் உள்ளே அமர்ந்திருப்பவர்களின் உடல் வெப்பம் மற்றும் மூச்சுக்காற்று காரணமாக காரின் உட்புறம் வெப்பமாக இருக்கும். இந்த இரு வேறு வெப்பநிலைகள் காரின் கண்ணாடியில் மோதும்போது, உட்புறக் கண்ணாடியில் ஈரப்பதம் நீர்த்துளிகளாகப் படிந்து மங்கலாக மாறிவிடுகிறது.

Advertisement

எளிய ட்ரிக்ஸ்

ஏசி மற்றும் டிஃபாகர் செட்டிங்ஸ்

உங்கள் காரின் டேஷ்போர்டில் 'Defogger' குறியீடு (வளைந்த கோடுகளுடன் கூடிய கண்ணாடி வடிவம்) இருக்கும். அதை ஆன் செய்யுங்கள். அதன் பிறகு, காரின் ஏசியை ஆன் செய்து, காற்றின் திசையை விண்ட்ஷீல்டு கண்ணாடியை நோக்கி (Front Defrost Mode) திருப்பி வையுங்கள். இது காரின் உள்ளே இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி கண்ணாடியை உடனே சுத்தமாக்கிவிடும்.

Advertisement

எளிய ட்ரிக்ஸ்

வெளிக்காற்று பயன்முறை

காரின் ஏசியில் எப்போதும் 'Recirculation Mode' (காரின் உள்ளேயே காற்று சுழலும் வசதி) ஆன் செய்திருப்போம். கண்ணாடி மங்கலாகும்போது, அதை மாற்றி 'Fresh Air Mode' (வெளியில் இருந்து காற்று உள்ளே வரும் வசதி) ஆன் செய்ய வேண்டும். இது காரின் உட்புற மற்றும் வெளிப்புற வெப்பநிலையைச் சமமாக்கி, புகையை நொடியில் மறைந்துபோகச் செய்யும்.

எளிய ட்ரிக்ஸ்

கண்ணாடியை சற்றே இறக்கி விடுங்கள்

ஒருவேளை உங்கள் காரில் ஏசி வேலை செய்யவில்லை அல்லது ஏசி போட உங்களுக்கு விருப்பமில்லை என்றால், காரின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை ஒரு இன்ச் அளவுக்குச் சற்றே கீழே இறக்கி விடுங்கள். வெளிப்புறக் குளிர்ந்த காற்று உள்ளே வரும்போது, காரின் உட்புற வெப்பநிலை குறைந்து கண்ணாடி தானாகவே தெளிவாகிவிடும்.

வீட்டு நடைமுறை

ஒரு அட்வான்ஸ் வீட்டு நடைமுறை

மழைக்காலத்திற்கு முன்பாகவே காரின் உட்புறக் கண்ணாடியில் சிறிதளவு ஹேர் ஷாம்பு அல்லது லிக்விட் சோப்பை உலர்ந்த துணியில் தடவி லேசாகத் துடைத்து வையுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் கண்ணாடியின் மேல் ஒரு பாதுகாப்பு அடுக்கு உருவாகும். இதனால் மழையின் போது கண்ணாடியில் எவ்வளவு ஈரப்பதம் வந்தாலும் பனி மூட்டம் போல் மங்கலாகாது.

Advertisement