ஹோண்டா ஆக்டிவா 125 vs சுஸூகி அக்சஸ் 125, இரண்டில் எது பெஸ்ட்?
2023-ம் ஆண்டுக்கான அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா-125 மாடலை வெளியிட்டிருக்கிறது ஹோண்டா. இந்தியாவில் சுஸூகியின் அக்சஸ் 125-க்கு போட்டியாக களமிறங்கியிருக்கிறது இந்த மாடல். இரண்டில் எது பெஸ்ட்? வசதிகள்: ஆக்டிவாவில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பொசிஷன் லேம்ப், சிங்கில்-பீஸ் சீட், செமி-டிஜிட்டல் இன்ட்ரூமன்ட் கிளஸ்டர், சைடு ஸ்டாண்டு கட்-ஆஃப் ஸ்விட்ச் மற்றும் ஸ்மார்ட் கீ ஆகிய வசதிகளை வழங்குகிறது ஹோண்டா. அக்சஸில் வட்ட வடிவ கண்ணாடிகள், பில்லியன் கிராப் ரெய்ல், அலாய் வீல்கள், ப்ளூடூத் வசதியுடன் கூடிய இன்ஸ்ட்ரூமன்ட் கிளஸ்டரை வழங்குகிறது சுஸூகி. கிரௌண்டு கிளியரன்ஸ்: 162மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ், 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொண்டிருக்கிறது ஆக்டிவா. 160மிமீ கிரௌண்டு கிளியரன்ஸ், 5 லிட்டர் பெட்ரோல் டேங்கைக் கொண்டிருக்கிறது அக்சஸ்.
இன்ஜின்:
8.2hp பவர் மற்றும் 10.3Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 123.97சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜினைப் பெற்றிருக்கிறது ஆக்டிவா 125. 8.6hp பவர் மற்றும் 10Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய 124சிசி, 4-ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜினைக் கொண்டிருக்கிறது அக்சஸ். ப்ரேக்கிங்: இரண்டு மாடல்களிலுமே முன்பக்கம் டிஸ்க்/ட்ரம் ப்ரேக்கும், பின்பக்கம் ட்ரம் பிரேக்குமே கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆக்டிவாவில் கூடுதலாக CBS, ஐடியல் ஸ்டாப் மற்றும் ஆண்ட்டி-தெஃப்ட் சிஸ்டமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. எதை வாங்கலாம்? ரூ.78,920 முதல் ரூ.88,093 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது ஆக்டிவா 125. ரூ.79,400 முதல் ரூ.89,500 வரையிலான எக்ஸ்-ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது அக்சஸ் 125. இரண்டுமே சரிசமமாக இருக்கும் நிலையில் மற்ற வசதிகளுடன் சேர்த்து ஆக்டிவா சிறந்த தேர்வாக இருக்கிறது.