Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்?
செய்தி முன்னோட்டம்
ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில், புதிய 100 சிசி பைக்கை அறிமுகப்படுத்துகிறது.
தற்போது புதிய 100 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை ஹோண்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய 100 சிசி பைக் வரும் மார்ச் 15ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
இந்த புதிய 100 சிசி பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஹெச்பி பவர் மற்றும் 8 என்எம் டார்க் திறனை கொண்டுள்ளது.
ஹோண்டா நிறுவனம்
ஹோண்டாவின் புதிய 100 சிசி பைக் - சிறப்பு அம்சங்கள் என்ன?
பொதுவாக ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளில் வழங்கப்படும் இன்ஜின்கள் சிறப்பானதாக இருக்கும். இது இந்த புதிய 100 சிசி பைக்கிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தோடு, அலாய் வீல்கள், சிங்கிள் பீஸ் சீட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வலுவான க்ராப் ரெயில், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்கள் உள்ளன.
இதேப்போல் ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஒரு சில டிசைன் அம்சங்களை நாம் இந்த புதிய பைக்கிலும் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய இந்த பைக் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகின்றன.