ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டர், எத்தனை வேரியன்ட்களாக? என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?
செய்தி முன்னோட்டம்
டெஸ்டினி 125 ஸ்கூட்டர் மாடலை கடந்த ஆண்டு தான் ஸ்டைலாக மறுவடிவமைப்பு செய்தது ஹீரோ மோட்டோகார்ப். இந்தப் புதிய வடிவமைப்பில் வெளியிடப்பட்டதில் இருந்து டெஸ்டினியின் விற்பனையும் உயர்ந்திருக்கிறது. இப்போது இந்த ஸ்கூட்டரை என்ன விலையில் நாம் வாங்கலாம் என்பதைப் பார்க்கலாம். இந்த 125 சிசி ஸ்கூட்டரை VX, ZX மற்றும் ZX+ என மூன்று வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது ஹீரோ. மூன்று வேரியன்ட்களிலும் மெக்கானிக்கலாக எந்த மாற்றமும் இருக்காது. டிசைன் மற்றும் வசதிகளில் மட்டுமே சின்னச் சின்ன வேறுபாடுகள் இருக்கும்.
ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோ டெஸ்டினி 125 வேரியன்ட்கள் மற்றும் விலை
அடிப்படையான VX வேரியன்டை ரூ.75,838 என்ற விலையில் நாம் வாங்கலாம். சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் இந்த அடிப்படை வேரியன்ட் கிடைக்கிறது. இடைநிலை ZX வேரியன்டை ரூ.83,997 என்ற விலையில் நாம் வாங்கலாம். ஆட்டோ கேன்சல் இன்டிகேட்டர், டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், டைமன்டு கட் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக்குகள் ஆகிய கூடுதல் வசதிகள் இந்த வேரியன்டில் உண்டு. டாப் எண்டான ZX+ வேரியன்டை ரூ.85,769 என்ற விலையில் வாங்கலாம். காப்பர் குரோம் நிற ஹைலைட்களுடன் பார்ப்பதற்கே மிகவும் ஸ்டைலான வேரியன்டாக இது இருக்கும். ZX வேரியன்டில் இருக்கும் வசதிகள் தான் ZX+ வேரியன்டிலும் கொடுக்கப்பட்டுள்ளது. வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய நிறங்களில் இந்த வேரியன்ட் கிடைக்கிறது.
ஸ்கூட்டர்
டெஸ்டினி 125 இன்ஜின் மற்றும் பெர்ஃபாமன்ஸ்
எந்தவொரு வாகனத்திற்கும் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ் மிகவும் முக்கியம். இந்த டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் 124.6 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஃப்யூல் இன்ஜெக்ஷன் மற்றும் i3s தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கும் இந்த இன்ஜினானது 9 hp பவர் மற்றும் 10.4 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது. நிஜ உலகப் பயன்பாட்டில் லிட்டருக்கு 45 கிமீ முதல் 50 கிமீ வரையிலான மைலேஜை இந்த ஸ்கூட்டர் கொடுக்கிறது. அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் இந்த ஹீரோ டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் பயணிக்க முடியும்.