ஃபெராரியின் முதல் எஸ்யூவி இந்தியாவில் அதிகாரபூர்வமாக வெளியானது
புரோசாங்யூ- ஃபெராரியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் SUV மாடலானது, ரூ.10.5 கோடி(எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையுடன் அதிகாரப்பூர்வமாக இந்தியாவிற்கு வந்துள்ளது. ஃபெராரி நிறுவனம் ஏற்கனவே இந்த எஸ்யூவியை டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. முதல் யூனிட் சமீபத்தில் பெங்களூருவில் வழங்கப்பட்டது. இதன்மூலம், லம்போர்கினி உருஸ் ஆதிக்கம் செலுத்தி வந்த செயல்திறன் கொண்ட SUV பிரிவில் உயர்-செயல்திறன் கொண்ட வாகனமான ஃபெராரி தன்னுடைய முத்திரையை பதிக்க வருகிறது. புரோசாங்கு. 6.5-லிட்டர், V12 இன்ஜின் மூலம் 7,750rpm இல் 715hp ஆற்றலையும், 6,250rpm இல் 716Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்கிறது. இதன் என்ஜின் நான்கு சக்கர இயக்கி அமைப்புடன் 8-வேக DCT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபெராரி புரோசாங்குவிற்கான ஆர்டர் புக்கிங்குகள் 2026 வரை நிரம்பிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புரோசாங்குவின் வடிவமைப்பு மற்றும் உட்புறங்கள்
ஃபெராரியின் புரோசாங்கு மாடலானது மஸ்குலர் பானட், பம்பர் பொருத்தப்பட்ட எல்இடி ஹெட்லைட்கள், ஸ்பிளிட்-டைப் டிஆர்எல்கள், ஃபெராரியின் சின்னமான 'Prancing Horse' லோகோவுடன் கூடிய பெரிய கிரில், ஸ்டைலிஷான பின் கதவுகள், டிசைனர் வீல்கள் மற்றும் நேர்த்தியான எல்இடி டெயில்லைட்டுகள் உடன் வருகிறது. நான்கு இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான கேபினில் பிரீமியம் லெதர் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரோக்ரோமிக் கண்ணாடி கூரை, துடுப்பு ஷிஃப்டர்கள், 10.25 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் மற்றும் பாதுகாப்பிற்காக பல ஏர்பேக்குகள் உள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் தங்கள் SUVயின் பக்கங்களில் ஃபெராரி ஷீல்டுகள், மேம்படுத்தப்பட்ட சக்கரங்கள், வர்ணம் பூசப்பட்ட பிரேக் காலிப்பர்கள், மாறுபட்ட உள்துறை தையல் மற்றும் இரண்டு அச்சுகளிலும் சஸ்பென்ஷன் லிஃப்ட் செயல்பாடு ஆகியவற்றைக் கொண்டு தனிப்பயனாக்கலாம்.