
புதிய 2023 ராயல் என்ஃபீல்டு 350 - பழைய மாடலுக்கான வேறுபாடுகள் என்ன?
செய்தி முன்னோட்டம்
சென்னையை தளமாக கொண்ட ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது புதிய புல்லட் 350 மோட்டார் சைக்கிளை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய புல்லட் 350 மாடலானது வாடிக்கையாளர்களிடம் மிக முக்கியமான பைக் ஆகும். வரவிருக்கும் பதிப்பு ஏராளமான அம்சங்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்களை கவர விலையிலும் மாற்றம் இருக்கும் எனக்கூறப்படுகிறது.
புதிய புல்லட் 350 இல் 346 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்படும். இவை 19hp பவரையும், 28nm டார்க்கையும் வெளியிடும்.
புதிய ஜென் புல்லட் 350 ஆனது வட்ட வடிவ ஆலசன் ஹெட்லேம்ப், மற்றும் வட்ட வடிவ டெயில் லேம்ப் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் விண்டேஜ் தொடர்ந்து வழக்கமான ஸ்டைலை கொண்டிருக்கும்.
ராயல் என்ஃபீல்டு பைக்
புதிய ராயல் என்ஃபீல்டு 350 - இடம் பெறும் முக்கிய அம்சங்கள் என்ன?
புதிய புல்லட்டில் இரண்டு சக்கரங்களிலுமே டிஸ்க் ப்ரேக்கை கொண்டிருக்கும். ஆனால் தற்போதைய மாடலில் முன்புறம் டிஸ்க் பின்புறம் டிரம் ப்ரேக்கை கொண்டுள்ளது.
புதிய மாடலில் ABSயையும் கொண்டுள்ளது. இதனால் இவை வேக கட்டுப்பாட்டை எளிதாக்கும்.
விலை என்ன?
ராயல் என்ஃபீல்டு இந்தியாவில் 2023 புல்லட் 350இன் விற்பனை மற்றும் விலை விவரங்களை விரைவில் வெளியிடும்.
இருந்தாலும், வெளிச்செல்லும் மாடலைக் காட்டிலும் இதன் விலை ரூ. 1.51 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.