இந்தியாவில் வெளியாகும் புதிய சிட்ரன் C3X செடான்?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தங்களுடைய ஐந்தானது கார் மாடலாகவும், C3 லைன்அப்பில் மூன்றாவது கார் மாடலாகவும், புதிய C3X செடானை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது பிரான்ஸைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவமான சிட்ரன். இந்தியாவில் ஏற்கனவே விற்பனையாகி வரும் ஹோண்டா சிட்டி, ஸ்கோடா ஸ்லாவியா, ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ் மற்றும் அடுத்து வெளியாகவிருக்கும் டாடா கர்வ் ஆகிய மாடல்களுக்கப் போட்டியாக இந்தப் புதிய C3X செடானை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது சிட்ரன். பிற C3 மாடல்களான, C3 மற்றும் C3 ஏர்கிராஸ் ஆகியவை கட்டமைக்கப்பட்ட அதே CMP பிளாட்ஃபார்மிலேயே புதிய C3X காரையும் கட்டமைக்கவிருக்கிறது அந்நிறுவனம்.
சிட்ரன் C3X செடான்: என்ன எதிர்பார்க்கலாம்?
சிட்ரனின் பிற C3 மாடல்களில் இருக்கக்கூடிய சில அம்சங்களை இந்த C3X செடானிலும் நாம் எதிர்பார்க்கலாம். மேலும், C3 ஏர்கிராஸ் எஸ்யூவியை அடிப்படையாகக் கொண்ட டிசைனை C3X-ல் நாம் எதிர்பார்க்கலாம். 108hp பவர் மற்றும் 190Nm டார்க்கை வெளிப்படுத்தக்கூடிய, மூன்று சிலிண்டர்கள் கொண்ட, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினை புதிய C3X செடானில் சிட்ரன் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரு வகையான கியர்பாக்ஸ் தேர்வுகளும் புதிய C3X-ல் கொடுக்கப்படவிருக்கின்றன. இந்த எரிபொருள் C3X-த் தொடர்ந்து, 400-500 கிமீ ரேஞ்சு கொண்ட எலெக்ட்ரிக் C3X மாடலையும் பிற்காலத்தில் வெளியிடம் திட்டத்தையும் கைவசம் வைத்திருக்கிறது சிட்ரன்.