
E20 எரிபொருள்: அரசு "பக்கவிளைவுகள் இல்லை" என கூறினாலும், உண்மை என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தற்போது E20 எரிபொருள்— அதாவது 20% எத்தனால் மற்றும் 80% பெட்ரோல் கலவையான எரிபொருள் நாடு முழுவதும் அறிமுகமாகியுள்ளது. இதனை ஒரு சுத்தமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று முயற்சி என அரசாங்கம் விளம்பரப்படுத்தி வருகிறது. மேலும், "பக்கவிளைவுகள் எதுவுமில்லை" என்ற வாக்குறுதியும் மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், வாடிக்கையாளர்கள், வாகன தொழில்நுட்ப நிபுணர்கள், மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதில் மிகுந்த சந்தேகத்துடன் இருக்கின்றனர். "E20 எரிபொருளால் உண்மையில் எந்த பக்கவிளைவுகளும் இல்லையா?" என்பதற்கான பதிலை விவரமாக பார்க்கலாம்.
செயல்திறன்
செயல்திறன் 1%-2% வரை மட்டுமே குறைகிறது
சோதனைகளின் அடிப்படையில், E20 காரணமாக செயல்திறன் 1%-2% வரை மட்டுமே குறைகிறது என கூறுகிறது. பழைய வாகனங்களில் இந்த குறைவு 3%-6% வரை இருக்கலாம் எனவும் தாங்களே ஏற்றுக்கொள்கின்றனர். சில ரப்பர் பாகங்கள்/கேஸ்கட்கள் போன்றவை, 20,000-30,000 கி.மீ. ஓட்டியபின் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உண்மை
E20 பயன்பாட்டால் ஏற்படக்கூடிய சாத்தியமான தாக்கங்கள்
2015க்கு முந்தைய வாகனங்கள் பெரும்பாலும் E20-ஐக் கையாள தயாராக இல்லை. அதிக எத்தனால் நீர் உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதால், ரப்பர் பாகங்களை சிதைக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். எரிபொருள் குழாய்கள், இன்ஜெக்டர்கள், சீல்கள், பம்புகள் போன்றவை விரைவில் பழுதடையும் வாய்ப்பு அதிகம். எத்தனால், பெட்ரோலுடன் ஒப்பிடும்போது குறைந்த ஆற்றல் கொண்டது என்பதால், எரிபொருள் செயல்திறன் குறைகிறது. இதனால், நீங்கள் அதிக எரிபொருள் செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகும். இந்தியாவின் ஈரப்பதமுள்ள, கடலோர பகுதி வாகனங்களில் கூடுதல் சிதைவு ஏற்படலாம். எத்தனால் சார்ந்த சோதனைகள் நிலையான, ஆய்வக சூழலில் நடத்தப்படுகின்றன. அதனால் நிஜ வாழ்க்கை சூழ்நிலைகள் முழுமையாக புறக்கணிக்கப்படுகின்றன என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அறிக்கை
மத்திய அரசு கூறுவது என்ன?
₹1.4 லட்சம் கோடி அந்நிய செலாவணியைக் கடைபிடித்துள்ளது (பெட்ரோல் இறக்குமதி குறைவு), ₹1.2 லட்சம் கோடி வருமானம் மூலம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் (எத்தனால் கொள்முதல் மூலம்). இதனால், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு குறைவு என்றும் மத்திய அரசு தெரிவிக்கிறது. அதோடு மத்திய அரசாங்கம் இந்த எத்தனால் எரிவாயுவால் பக்கவிளைவுகள் இல்லை எனவும் கூறியுள்ளது. E20 எரிபொருள் ஒரு நல்ல சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார தீர்வு என்றாலும், பழைய வாகனங்களுக்கு, தயாராக இல்லாத பயனாளர்களுக்கு மற்றும் சரியான விழிப்புணர்வு இல்லாத சமூகத்திற்கு இது பாதிப்புகள் மற்றும் செலவுகள் ஏற்படுத்தும். அதனால், நீங்கள் புதிய வாகனங்களை வாங்கும்போது, அவை E20 இணக்கமானதா என்பதை உறுதி செய்யுங்கள்.