Loading...
டிரைவிங் லைசென்ஸ் பெற இனி 75% மார்க் வேணும்; மத்திய அரசின் புதிய வரைவு அறிவிக்கை
இந்தியாவில் ஓட்டுநர் உரிம விதிகளில் மாற்றம்

டிரைவிங் லைசென்ஸ் பெற இனி 75% மார்க் வேணும்; மத்திய அரசின் புதிய வரைவு அறிவிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 23, 2026
02:33 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி ஓட்டுநர் உரிமம் பெறுவதைத் தடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களைக் கொண்டு வர புதிய வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் புதிய வண்ணக் குறியீடுகள் மற்றும் கடுமையான ஆன்லைன் தேர்வு முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. மேலும் இரத்த வகை, மொபைல் எண் மற்றும் அவசரக்கால தொடர்பு எண்கள் உரிமத்தில் கட்டாயமாக்கப்பட உள்ளன.

தனி வண்ணங்கள்

இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனி வண்ணக் குறியீடு

புதிய திட்டத்தின்படி இந்திய குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு தனித்தனியான வண்ணக் குறியீடுகளுடன் ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படும்.

மேலும் அவர்களின் தேசிய இனமும் உரிமத்தில் தெளிவாகக் குறிப்பிடப்படும்.

முகவரி மற்றும் வயது சான்றாக இதுவரைப் பயன்படுத்தப்பட்டு வந்த நோட்டரி அஃபிடவிட்கள் மற்றும் ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்கள் இனி ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இதற்கு பதிலாக அரசு வழங்கிய அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மட்டுமே சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

75% மதிப்பெண்

ஆன்லைன் தேர்வில் 75% மதிப்பெண் பெற்றால் மட்டுமே ஓட்டுநர் உரிமம்

ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ஓட்டுநர் பாதுகாப்பு பயிற்சித் தேர்வில் தேர்ச்சி பெற இனி 75 சதவீத மதிப்பெண்கள் தேவை.

இதற்கு முன் 60 சதவீதமாக இருந்த குறைந்தபட்ச மதிப்பெண் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பயிற்சி வகுப்பு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் வரை நீடிக்கும்.

இதன் மூலம் முறையான பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே சாலைக்கு வருவதை அரசு உறுதி செய்யவுள்ளது.

வணிக நோக்கமற்ற முறையில் விதிகள் மேலும் பலப்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

பெயர் மாற்றம்

15 நாட்களில் பெயர் மாற்றம் மற்றும் ஆதார் மூலம் இலவச சேவை

ஆதார் சரிபார்ப்பு மூலம் ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை மாற்றும் சேவைகள் இலவசமாக வழங்கப்படும்.

ஆன்லைன் விண்ணப்பங்கள் மீது 15 நாட்களுக்குள் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

30 நாட்களுக்கு மேல் விண்ணப்பம் நிலுவையில் இருந்தால் அது தானாகவே ஒப்புதல் பெற்றதாகக் கருதப்படும்.

சாரதி போர்ட்டல் மூலம் அனைத்துச் சேவைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விண்ணப்பதாரர்களின் விவரங்கள் நேரடியாக பெறப்படும்.

ADVERTISEMENT