இரண்டு மாதத்தில் சிட்ரோன் சி3 காரின் விலை உயர்வு - புதிய விலை என்ன?
செய்தி முன்னோட்டம்
கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு சிட்ரோன் கார் விலை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிறுவனம் சிட்ரோன் சி3 எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் இந்த காரின் விலை ரூ5.70 லட்சம் என்ற ஆரம்ப விலையில் துவங்கி டாப் வேரியின்ட் ரூ8.05 லட்சம் என்ற விலையில் விற்பனையானது.
ஆனால், இந்த விலை 6 மாதத்தில் தற்போது அதிரடியாக உயரத்தியுள்ளது. மொத்தம் 6 விதமான வேரியனட்களில் கிடைக்கும் இந்த சிட்ரோன் கார் விலை உயர்வுக்கு பின் ரூ6.16 லட்சமாக மாறிவிட்டது.
இந்த விலை உயர்வில் டாப் வேரியன்ட்டின் விலையில் மாற்றம் இல்லை டாப் வேரியன்ட் அதே ரூ8.25 லட்சம் என்ற விலையில் தான் விற்பனையாகி வருகிறது.
சிட்ரோன் சி3 கார்
இந்திய சந்தையில் சிட்ரோன் சி3 காரின் விலையை உயர்த்தியுள்ளது - எவ்வளவு?
ஆனால், மற்ற வேரியன்ட்கள் எல்லாம் ரூ18 ஆயிரம் விலை உயர்ந்துள்ளது.
சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த இன்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் உடன் பொருத்தப்படுகிறது.
சிட்ரோன் சி3 காரை பொருத்தவரை வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே சப்போர்ட் செய்யக்கூடிய 10.0 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.
தொடர்ந்து, முன்பக்கம் டூயல் ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சீட் பெல்ட் ரிமைன்டர்கள், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இபிடியுடன் ஏபிஎஸ் ஆகிய அம்சங்கள் இந்த காரில் இருக்கிறது.