LOADING...
இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up
'e200x' என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது The ePlane Company

இந்தியாவின் முதல் மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கும் சென்னையை சேர்ந்த start-up

எழுதியவர் Venkatalakshmi V
Feb 20, 2026
12:05 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையை சேர்ந்த 'The ePlane Company', நகர்ப்புற போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் 'e200x' என்ற மின்சார ஏர் டாக்ஸியை உருவாக்கி வருகிறது. இந்த விமானத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை உறுதி செய்ய, உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Nvidia உடன் இந்நிறுவனம் கைகோர்த்துள்ளது. என்விடியாவின் 'Omniverse' தளத்தை பயன்படுத்தி, e200x விமானத்தின் மிக துல்லியமான 'Digital Twin' உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நிஜ உலகில் பறப்பதற்கு முன்பே, கோடிக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தை மெய்நிகர் சூழலில் இந்த விமானம் கடந்து சோதிக்கப்படுகிறது. விமானத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மற்றும் ரேடார்களில் இருந்து வரும் தரவுகளை நொடிப் பொழுதில் ஆய்வு செய்து, சரியான முடிவுகளை எடுக்க என்விடியாவின் ஆன்-போர்டு கம்ப்யூட்டிங் சிஸ்டம் உதவுகிறது.

பாதுகாப்பு

பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு

இந்த டிஜிட்டல் ட்வின் தொழில்நுட்பம் வெறும் சோதனைக்கு மட்டுமல்லாமல், விமானத்தின் பாகங்களில் ஏற்படக்கூடிய கோளாறுகளை முன்கூட்டியே கண்டறியும் கருவியாகவும் செயல்படுகிறது. இதன் மூலம் விபத்து அபாயங்கள் பெருமளவு குறைக்கப்படுகின்றன. அரிதான வானிலை மாற்றங்கள் மற்றும் அவசர காலச் சூழல்களை டிஜிட்டல் முறையில் உருவாக்கி, அதில் விமானம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறியாளர்கள் முன்கூட்டியே சோதிக்கின்றனர். Times now வெளியிட்டுள்ள செய்தியில், நிறுவனத்தின் முதன்மை பொறியாளர் பக்தகோலாஹலன் சியாம்சுந்தர், "மெய்நிகர் சூழலில் செய்யப்படும் சோதனைகள், நிஜ உலகில் விமானம் பறக்கும்போது எந்தவிதமான பாதுகாப்பு சமரசமும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்கிறது" என்று தெரிவித்தார். இந்தியாவின் நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்து துறையில் இந்த திட்டம் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.

Advertisement