உலக புகழ் பெற்ற புகாட்டி காரின் பெயிண்ட் அடிக்கும் ரகசியம் என்ன தெரியுமா?
உலகிலேயே தலை சிறந்த கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தான் புகாட்டி. புகாட்டி நிறுவனத்திடம் என்னதான் பணத்தை கொடுத்து காரை உடனே கேட்டாலும் கிடைக்காது. நீங்கள் ஆர்டர் செய்தால் அதற்கு பல மாதம் எடுத்துக் கொள்வார்கள். இந்த நிலையில், தற்போது புகாட்டி கார் பெயிண்ட் அடிக்கும் முறை பற்றிய தகவல் கிடைத்துள்ளது. இத்தகவல் பலரையும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. புகாட்டி காருக்கு மொத்தம் 8 லேயர்களில் பெயிண்ட் அடிக்கப்படுகிறது. காரை தனித்தனியாக பிரித்து தான் பெயிண்ட் அடிக்கப்படும். அதற்கு முன் பல சோதனைகளை செய்வார்கள். அனைத்தும் கைகளால் செய்யப்படுவதால் ஒவ்வொரு காருக்கும் செக்கப் நடக்கும். மொத்தம் 8 விதமான லேயர்கள் வழங்கப்படுவதால் ஒவ்வொரு லேயருக்கும் ஒருவர் பொறுப்பாளராக இருப்பார்.
உலக புகழ்பெற்ற புகாட்டி காருக்கு பெயிண்ட் அடிக்கும் முறைகள்
ஒவ்வொரு லேயர் முடிந்த பின்னும், கலரில் ஏதாவது சிறிய வித்தியசம் இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள். இப்படியாக 8 லேயர் பெயிண்ட் அடிக்கப்படும். பெயிண்ட் வேலை முடிந்த பின் பிரைட் லைட் டனல் பகுதியில் 10 மணி நேரம் காய வைப்பார்கள். அதன்பின் மீண்டும் சோதிக்கப்படும். கடைசியாக பேனலின் ஒவ்வொரு மில்லி மீட்டரையும் சோதனை செய்வார்கள். அதில் பாஸ் ஆனால் மட்டுமே இந்த கார் வெளியே விற்பனைக்கு வரும். பெயிண்ட் செய்பவர்கள் உலகிலேயே சிறந்த அனுபவம் உள்ள பெயிண்டர்களாக இருக்கின்றனர். இந்த பெயிண்டிங்கை செய்ய சுமார் 600 மணி நேரம் ஆகும். இதற்காக தான் புகாட்டி காரின் விலையும் அதிகமாக இருக்கிறது அதே நேரத்தில் இந்த காருக்கு மக்கள் மத்தியில் மவுசு இருக்கிறது.