Page Loader
இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது
இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது

இந்தியாவில் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழ் சோதனைகள் தொடங்கியது

எழுதியவர் Prasanna Venkatesh
Dec 15, 2023
04:21 pm

செய்தி முன்னோட்டம்

பாரத் NCAP திட்டத்தின் மூலம் கார்களின் தரச்சோதனை செய்வது இன்று முதல் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வாகனத்தில் இருப்பவர்கள் மட்டுமின்றி, விபத்து நேரங்களில் சாலையில் நடந்து செல்பவர்களும் பாதுகாப்பாக இருக்கும் வகையிலான அம்சங்களையும் இந்த பாரத் NCAP திட்டத்தின் மூலம் மேம்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. குளோபல் NCAP தரச்சோதனைத் திட்டத்தை பின்பற்றி, பல்வேறு நாடுகள் தங்கள் நாடுகளுக்கான தரச்சோதனைத் திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியாவும், நமக்குத் தேவையான புதிய கார் தரச்சோதனைச் திட்டமாக பாரத் NCAP திட்டதை அறிமுக்கபடுத்தியது. 36 கார்கள் இந்தப் புதிய திட்டத்தின் கீழ் தரச்சோதனைக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டிருக்கின்றன.

இந்தியா

பாரத் NCAP தரச்சோதனைத் திட்டம்: 

குளோபல் NCAP-ஐ போலவே, பெரியவர்கள் மற்றும் சிறியவர்களுக்கான பாதுகாப்புப் புள்ளிகள் பாரத் NCAP தரச்சோதனைத் திட்டத்தின் கீழும் வழங்கப்படவிருக்கின்றன. மேலும், ஆட்டோமோட்டிவ் இந்தியன் ஸ்டாண்டர்ட்ஸின் (AIS) அடிப்படையில் இந்த பாதுகாப்புப் புள்ளிகள் வழங்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குளோபல் NCAP-ஓ ஐரோப்பிய ஒன்றியத்தில் பின்பற்றப்படும் பாதுகாப்பு ஸ்டாண்டர்டை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகளை வழங்கி வந்தது. எட்டு பயணிகள் வரை பயணம் செய்யக்கூடிய 3,500 கிலோவுக்கு உட்பட்ட M1 பிரிவு வாகனங்கள் அனைத்தும் இந்தப் புதிய பாரத் NCAP திட்டத்தின் கீழ் சோதனை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய சோனதைத் திட்டத்தின் கீழ் தங்களுடைய கார்களை சோதனை செய்ய மாருதி, ஹூண்டயா், மஹிந்திரா மற்றும் டாடா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தற்போதே பதிவு செய்திருக்கின்றன.