
இந்தியாவில் ரூ.15 லட்சத்திற்குள் கிடைக்கும் சிறந்த மின்சார கார்கள்
செய்தி முன்னோட்டம்
தற்போது சுற்றுச்சூழலுக்கு அதிகம் முன்னுரிமை அளிக்கப்படுவதால், அதிகமான நகரவாசிகள் சுற்றுசூழலுக்கு ஏற்ற போக்குவரத்து மாற்றுகளை நாடி வருகின்றனர்.
மின்சார வாகனங்கள்(EV கள்) பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக தினசரி பயன்பாட்டிற்கான மின்சார வாகனங்களை பலரும் தேடி வருகின்றனர்.
இந்திய நகரங்களின் பரபரப்பான தெருக்களில் செல்ல, ஐந்து எலக்ட்ரிக் வாகனங்கள் சிறந்தவையாக கருதப்படுகின்றன. அவை ஐந்துமே ரூ.15 லட்சத்திற்கு கீழ் விற்கப்படும் மாடல்களாகும்.
MG Comet EV என்பது அத்தகைய ஒரு வாகனமாகும், இது ரூ.6.99 லட்சத்திற்கு விற்கப்படுகிறது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 230கிமீ வரை செல்லக்கூடியது.
இந்தியா
சிட்ரோயனின் eC3, டாடா பஞ்ச் EV, டாடா டியாகோ EV
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய EV சந்தையில் நம்பகமான இடத்தில் முன்னிலையில் உள்ளது. டாடா மோட்டார்ஸின் Tiago.ev போன்ற மாடல்கள் ரூ.7.99 லட்சம் விலைக்கு விற்கப்படுகின்றன. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 315கிமீ வரை செல்லக்கூடியது.
டாடா மோட்டார்ஸின் டாடா பஞ்ச் EV என்ற மாடல் ரூ.10.99 லட்சம் முதல் ரூ.15.49 லட்சம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றன. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 421கிமீ மற்றும் 315கிமீ வரை செல்லும்.
சிட்ரோயனின் eC3, ரூ.11.61 லட்சம் என்ற விலையில் கிடைக்கிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 320கிமீ வரை பயணிக்கலாம். இந்த மாடல் C3 ஹேட்ச்பேக்கை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இது தற்போது எலக்ட்ரிக் டிரைவ் டிரெய்னைக் கொண்டுள்ளது.