டர்போ சார்ஜ்டு இன்ஜின்களைக் கொண்ட காரில் என்னென்ன நன்மைகள்?
டர்போ சார்ஜ்டு இன்ஜின் கொண்ட கார்கள் இப்போது அதிக அளவில் வெளியாகின்றன. ஒரே கார் மாடலே கூட சாதாரண இன்ஜின், டர்போ சார்ஜ்டு இன்ஜின் என இரு வேறு விதமான இன்ஜின்களுடன் வெளியாகின்றன. டர்போ சார்ஜ்டு இன்ஜின் என்றால் என்ன? அவற்றின் சாதக பாதகங்கள் என்ன? பார்க்கலாம். டர்போ சார்ஜ்டு இன்ஜின் கொண்ட கார்களில் எக்ஸாஸ்ட் வழியாக வெளியேறும் புகையை டர்பைன்கள் கொண்டு இழுத்து மீண்டும் கம்பஸ்சன் சாம்பருக்குள் செலுத்துவது தான் டர்போ சார்ஜரின் வேலை. இந்த செயல்பாட்டின் மூலம் சிலிண்டருக்குள் அதிக அளவிலான காற்று செலுத்தப்பட்டு, அதன் மூலம் காருக்குக் கிடைக்கும் பவரும் அதிகரிக்கிறது.
டர்போ சார்ஜர்கள் கொண்ட இன்ஜினில் சாதக, பாதகங்கள்:
டர்போ சார்ஜர்கள் கொண்ட இன்ஜினில், பவரும், மைலேஜூம் கொஞ்சம் அதிகமாகக் கிடைக்கும். இன்ஜினில் இருந்து வெளியேறும் புகையை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் குறைக்கும். சாதாரண இன்ஜின் கார்களை விட டர்போ சார்ஜ்டு இன்ஜின் கார்களின் விலை கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். டர்போ சார்ஜ்டு இன்ஜின்களில் ப்ரீ-இக்னிஷன் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாம் ஆக்ஸிலரேட்டரை கொஞ்சம் அதிகமாகக் கொடுத்தால், இன்ஜினின் அழுத்தம் கணிசமாக அதிகரித்து, ஸ்பார்க் ப்ளக் பற்றும் முன்பே ஏரிபொருள் தீப்பிடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தவிர்க்க டர்போ சார்ஜர்கள் கொண்ட கார்களில் ஹை-ஆக்டேன் பெட்ரோலியத்தையே பயன்படுத்த வேண்டும். பவர் அதிகமாகக் கிடைக்க கம்ப்ரஸர் குறைவான வேகத்திலேயே இயங்க வேண்டியிருக்கும். இதனால், பவர் டெலிவரி மெதுவாக இருக்கும்.