LOADING...
ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்கள் மற்றும் விலை
ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியன்ட்கள் மற்றும் விலை

எழுதியவர் Prasanna
Mar 10, 2026
09:38 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்று ஏத்தர் ரிஸ்டா. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை S மற்றும் Z என இரண்டு வேரியன்ட்களாக விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம். இரண்டு வேரியன்ட்களிலும் 2.9 kWh (123 கிமீ ரேஞ்சு) மற்றும் 3.7 kWh (159 கிமீ ரேஞ்சு) என இரண்டு பேட்டரி பேக் தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து வேரியன்ட்களிலும் எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் ஒன்று தான். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.3 kW பவர் மற்றும் 22 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் செட்டப் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த செட்டப் மூலம் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது இந்த ஸ்கூட்டர்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?

ரிஸ்டா S 2.9 kWh வேரியன்டானது ரூ.1.15 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் S 3.7 kWh வேரியன்டானது ரூ.1.39 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது. ரிஸ்டா Z 2.9 kWh வேரியன்டானது ரூ.1.33 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும், Z 3.7 kWh வேரியன்டானது ரூ.1.53 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையையும் கொண்டுள்ளது. இத்துடன் 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வரை ஸ்டாண்டர்டு வாரண்டி வழங்கப்படுகிறது. ஏத்தர் ஸ்டாக் ப்ரோவை ரூ.22,000-த்துக்கு வாங்குவதன் மூலம் கூடுதல் வசதிகளையும், கூடுதல் வாரண்டி காலத்தையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

Advertisement